டிஷ் டிவியின் இலங்கைக்கான சேவை விரைவில் உதயமாகவுள்ளதால் இந்த வருடங்களில் இந்தியாவில் விற்பணை ஆன கோ டேரைட் எனப்படும் அனைத்து பாக்ஸ்களும் நிருத்தி வைத்துள்ளது டிஷ் டிவி தமிழ்நாட்டில் யாரேனுக்கும் நிருத்தி வைக்கப்பட்டிருந்தால் உடனே இந்த நம்பர்க்கு கால் செய்து 044-60013474 உங்கள் முகவரியை கூறி மறுபடியும் ஆக்டிவ் செய்துகொள்ளலாம். இது கோ டேரைக்ட் பாக்ஸ்களுக்கு மட்டும் அல்ல ஜிங் டிடிஹச்க்கும் தான்.
வெளிநாடுகளில் வாங்கி உபயோகம் செய்பவர்கள் இந்தியா வாடிக்கையாளராக இருக்க விரும்பினால் நீங்கள் பாக்ஸ் வாங்கியவரை தொடர்பு கொண்டு முகவரியை கொடுக்க சொல்லுங்கள். இல்லையெனில் நீங்கள் டாலர் அல்லது இலங்கையின் வாடிக்கையாளராக மாற்றப்படுவீர் மீண்டும் இந்திய வாடிக்கையாளர் ஆக முடியாது. இலங்கையில் உள்ளவர்கள் நேரடியாக உங்கள் நாட்டு நம்பரில் அலைத்தால் நீங்கள் இலங்கை வாடிக்கையாளர் என்பது நீங்களே உறுதி அளிப்பது போன்று ஆகி விடும் அப்படிபட்ட முட்டாள் தனமாக காரியத்தை செய்யவேண்டாம். டிஷ் டிவிக்கு ஏன் இந்த கொலைவெறி என பல நபர்கள் யோசிக்கலாம் கீழே பாருங்க.
விரைவில் 10 இலங்கை தமிழ் சேனல்களுடன் உதயமாகும் டிஷ் டிவி லங்கா சேவை! இதன் காரணமாக இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள் இந்தியாவில் ரீசார்ஜ் செய்யவிடக்கூடாது என்ற நோக்கத்துடனே இந்த பாக்ஸ்களை அனைத்தையும் கட் செய்து உள்ளது. இன்னும் ஒரு சிலருக்கு புரியாமல் இருக்கும். தெளிவா படிங்க உங்கள் சேவையில் என்றும் நமது DTH News செயற்க்கைகோள் சேவை இருக்கும்.
நான் இந்தியாவில் இருக்கிறேன் எனது பாக்ஸ் கட் செய்து உள்ளார்கள் எனில் நான் இந்திய நம்பரில் அழைத்து எனக்கு படம் தெரியவில்லை என கேட்டால் உங்கள் முகவரி சரிபார்த்தல் காரணமாக கட் ஆகியுள்ளது உங்கள் முகவரி தொலைபேசி எண் கொடுக்கவும் என கேட்ப்பார்கள் நான் கொடுத்து விட்டேன் என்றால் என்னுடைய பாக்ஸ் ஆக்டிவ் ஆகிவிடும். இதே இலங்கையில் பார்க்கும் வாடிக்கையாளர் தனது ரீசார்ஜ் தேதி முடிந்து ரீசார்ஜ் செய்தும் படம் தெரியவில்லை என்றால் அது தான் முகவரி சரிபார்த்தலுக்கு கட் செய்துள்ளார்கள் என்று அர்த்தம். நீங்கள் இலங்கை நாட்டு நம்பரில் அழைத்தால் உங்களுக்கு படம் வரும் கூடவே நீங்கள் அமெரிக்கா டாலருக்கு கடத்தப்படுவீர்கள் இவ்வாறு முகவரி இல்லாதா பாக்ஸ் அனைத்தும் டாலர் அல்லது இலங்கை வாடிக்கையாளராக மாற்றப்படுவீர்கள் இந்த செய்தி முழுவதும் இலங்கை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயன்படும் என்று நான் நினைக்கிறேன்.
Post a Comment