Home » , , , , , , , » டிஷ் டிவி செட்டாப்பாக்ஸ் ஐ வீடியோகான் டைரக்சனுக்கு மாற்றுவது எப்படி? என்பதன் முழு விபரம்

டிஷ் டிவி செட்டாப்பாக்ஸ் ஐ வீடியோகான் டைரக்சனுக்கு மாற்றுவது எப்படி? என்பதன் முழு விபரம்

Written By DTH News on 11 May 2018 | 8:26 PM

எமது இணையத்தளம் தற்பொழுது புதிய இணையமுகவரியில் இயங்கிகொண்டிருக்கும் விடயத்தை முதலில் பகிர்ந்துகொள்கிறேன். www.dth.news இதுவே எமது புதிய முகவரி. 

எந்தவொரு வணிக நோக்கமும் இல்லாமல் கடந்த ஐந்து வருடங்களாக வாசகர்களுக்கு நாம் DTH தகவல்களை வழங்கி வருகின்றோம்.  குறித்த காலத்தில் வாசகர்கள் சினிமா தகவல் மற்றும் வதந்திகளுக்கு வழங்கிய முக்கியத்துவத்தை இதுபோன்ற தொழில்நுட்பம் சர்ந்த செய்திகளுக்கு வழங்கவில்லை என்பது உண்மை. எனவே இனிமேலாவது எமது தகவல்களை வாசிப்பதுடன் நின்றுவிடாமல் அதிகம் எமது தகவல்களை பகிருங்கள் (Sharre) மற்றும் Like பணுங்கள்.

இந்தியாவின் மிகவும் பிரபல்யமான இரண்டு செய்மதி தொலைக்காட்சி சேவை நிறுவனங்கள் ஒன்றிணைந்தமை சம்பந்தமாக எமது இணையத்தளத்தில் தமிழில் முதன்மையாக முன்னதா நாம் செய்திகளை வெளியிட்டிருந்தோம். அவை Dish Tv மற்றும் Videocon. 

இந்த நிறுவனகள் வணிகரீதியாக ஒன்றிணைந்தாலும் மிக விரைவில் இவற்றின் சேவை ஒளிபரப்பும் ஒன்றிணைக்கபடும் என நாம் எதிர்வுகூறியிருந்தோம். எமது கணிப்பு என்றும் சரியாகவே இருக்கும். அதன் பிரகாரம் தற்போது இந்த மாற்றம் சிறிது சிறிதாக இடம்பெறுகிறது. 

நாம் எதிர்வு கூறியதுபோல் தற்பொழுது இரண்டு நிறுவங்களும் தமது செய்மதியை அதாவது ஒளிபரப்பு சேவையை ஒன்றிணைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளன. அதாவது Dish TV ஆனது  Videocon இன் செய்மதியான ST2  இற்கு தமது சேவையை மாற்ற தொடங்கிவிட்டது. 

இதுசம்பந்தமான மிக தெளிவான வீடியோ பதிவொன்றை நாம் வெளியிடுகின்றோம். நீங்கள் பார்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் மற்றவர்களுக்கும் இதை பகிரவும்.

இதற்கு மேலதிகமாக நீங்கள் உங்கள்  Dish Direction இலும் மாற்றம் செய்ய வேண்டி இருக்கும்.

இதுபோன்ற ஒரு நெருக்கடி நிலைமை 2010 ம் ஆண்டு  Sundirct  வாடிக்கையளர்களுக்கு ஏற்பட்டிருந்ததை சிலர் அறிவீர்கள். Sundirect  ஒளிபரப்பு சேவை இடம்பெற்ற செய்மதியில் ஏற்பட்ட கோளறு காரணமாக கிட்டதட்ட 03 மாத காலமாக செய்மதி சேவையை மாற்றிக்கொள்ள  Sundirect நிறுவனம் கால தாமதம் செய்தமை. மாற்றத்தின் பின் Set Up Box Update செய்வதில் பிரச்னை என வாடிக்கையாளர்கள் நிறைய நெருக்கடிகளை சந்தித்தனர். இக்காலகட்டத்தில் இந்த Upation  செய்ய இலங்கையில் 1000/= ரூபா வரை பெறப்பட்டது. இந்த நெருக்கடி காலத்திலும் நாம் இந்தியாவில் உள்ள எமது நண்பர்களுடன் இணைந்து இலவசமாக சேவையை வழங்கினோம்.

இதேபோன்ற ஒரு நிலை வரும் காலங்களில் Dish TV வாடிக்கயளர்களுக்கு ஏற்படலாம் என எமது வாசகர்களுக்கு நாம் எதிர்வு கூறுகின்றோம். 

என்ன இது குறைகளை மட்டும் இவர்கள் பதிவு செய்கிறார்களே என்று நினைக்க வேண்டாம். இந்த மாற்றத்தின் மூலம் Dish TV வாடிக்கையாளர்கள் அதிக சேனல்களை முக்கியமாக அதிக தமிழ் சேனல்களை கண்டுகளிப்பதுடன் மிகதெளிவான துல்லியமான படத்தெளிவினையும் அனுபவிக்கலாம். இந்த மாற்றத்தின் பின் Videocon செய்மதிமூலம் கிடைக்கின்ற Signal அளவும் மிக அதிகமாக இருக்கும்.

மேலதிக தொழில்நுட்ப உதவி தேவைப்படின் எமது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். +94758834254. இந்த செயன்முறையில் உங்கள் set up box இற்கு ஏதும் பாதிப்பு ஏற்படலாம். அதற்கு நீங்களே முற்றுமுழுதாக பொறுப்பேற்கவேண்டும்.

மேலும் எமது இந்த சேவையை வாசகர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு இணையத்தள முகவரியை பெறுவதற்கு மட்டும் மாதாந்தம் சுமார் இலங்கை நாணயம் 1999/- செலுத்தவேண்டி உள்ளது. வாசகர்கள் முடிந்தால் எமது இணையத்தளத்தில் paypal donation முலமாக உங்களால் முடிந்த அன்பளிப்புகளை வழங்கமுடியும்.



Share this article :

Post a Comment

 
Support : DTH News | DTH News 1st | DTH News 1st
Copyright © 2021. DTH News - All Rights Reserved
Template Created by Pratheeswaran Published by DTH News
Proudly powered by DTH News 1st