நண்பர்களே இலங்கை நாட்டின் தமிழ் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக திகழகூடிய பிரதான தமிழ் தொலைக்காட்சி வரிசையில் புதிய தொலைக்காட்சிகள் கடந்த சில வருடங்களாக தொடங்கப்பட்டு வருகிறது. இலங்கை கிழக்கு மாகணாத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சியே உதயம் டிவி. இத்தொலைக்காட்சியின் பிரதான ஒளிபரப்பு எஸ்டி2 செயற்கைகோள் ஊடாக சில மாதங்கள் இலங்கை மற்றும் ஆசியா நாடுகளுக்கு ஒளிபரப்பு வழங்கியது. பின்பு நாட்டில் நடைபெற்ற யுத்த நடவடிக்கைகளுக்கு பின்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டது. தற்சமயம் இலங்கையின் அதிநவின தொழில்நுட்பம் கொண்ட முதல் தமிழ் HD தொலைக்காட்சியாக உதயம் டிவி தொடங்கப்படவுள்ளது.
இலங்கையில் தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்தும் செயற்கைகோள் ஒளிபரப்பு அல்லாது தரைவழி மற்றும் இணையதளம் வயிலாக ஒளிபரப்பாகி வருகிறது. உதயம் டிவியின் பரிசார்ந்த ஒளிபரப்பு விரைவில் இலங்கையின் UHF மற்றும் PEO TV, Dialog TV போன்றவற்றின் முலம் தொடங்கப்படவுள்ளது. உதயம் டிவி இலங்கையின் பொழுதுபோக்கு தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியாக வலம் வரயிருக்கிறது.
தற்பொழுது இணையதளம் மூலமாக தனது பரீட்சார்த்த ஒளிபரப்பை தொடங்கியிருக்கிறது. மேலும் முகப்பு புத்தகம் வாயிலாகவும் செய்திகளை பிரசுரித்து வருகிறது. இது முழுக்க செய்தி சேவை தொலைகாட்சியா இல்லை பொழுது போக்கு அம்சங்களும் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
உதயம் தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு விரைவில் தொடங்கலாம். உலகில் வாழும் தமிழ் மக்களின் பொழுதுபோக்கு வரிசையில் அதிநவின தொழில்நுட்ப தொலைக்காட்சிகளை மலேசியா நாட்டில் ஆஸ்ட்ரோ விண்மீன் ஹெச்டி மற்றும் கனடா நாட்டில் மின்னல்டிவி ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியாவில் சன் டிவி குழுமம் மட்டும் ஹெச்டி தொலைக்காட்சிகளை ஒளிபரப்பி வருகிறது.
இதுபோன்ற தொலைக்காட்சி, வானொலி மற்றும் செய்மதி தொலைக்காட்சி சேவைகள் சம்பந்தமான செய்திகளை தமிழில் உடனுக்குடன் அறிந்துகொள்ள தொடர்ந்து எமது இணையதளத்துடனும், முகப்பு புத்தகம் வாயிலாக எமது பக்கத்தை Like செய்தும் இணைந்திருங்கள்.
Post a Comment