இந்தியாவின் முன்னணி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான Viacom18 தமிழகத்தில் இரண்டு புதிய தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளனா்.
தமிழ் மொழி Audio முலம் நிகழ்ச்சிகளை வழங்கி வந்த Fyi TV18 மற்றும் History TV18 தற்சமயம் தமிழ் மொழியில் 24 மணி நேரமும் நிகழ்ச்சிகளை வழங்க கூடிய Fyi TV18 தமிழ், History TV18 தமிழ் என இரண்டு தமிழ் தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளனா்.
கடந்த வருடத்தில் இந்த இரண்டு புதிய தொலைக்காட்சிகளை தொடங்குவதற்கான அனுமதியினை மத்திய ஒளிபரப்பு ஆணையம் வழங்கியதை அடுத்து இத் தொலைக்காட்சிகள் தொடங்கப்படடுள்ளது.
தமிழகத்தில் Discovery தமிழ், Travel XP தமிழ், Star Sports தமிழ் போன்ற தொலைக்காட்சிகளை போன்று தமிழ் மொழியில் மட்டும் Fyi TV18 தமிழ் மற்றும் History TV18 தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கும்.
இந்தியாவில் Viacom18 முதன்முறையாக மொழி வாாியான Fyi TV18 தமிழ் மற்றும் History TV18 தமிழ் நிகழச்சிகளை ஒளிபரப்பு செய்வதற்கு தனி தொலைக்காட்சி அனுமதி பெற்றது இதுவே முதல் முறையாகும்.
தொலைக்காட்சியின் ஒளிபரப்பு கட்டண தொலைக்காட்சியாக Intelsat20 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது. வழமைபோல் Fyi TV18 HD மற்றும் History TV18 HD தொலைக்காட்சிகள் தமிழ் Audio முலம் மட்டும் நிகழ்ச்சிகளை வழங்கும்.
தொலைக்காட்சியின் அலைவாிசை Signal பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான C-Band டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம். Fyi TV18 தமிழ் மற்றும் History TV18 தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு விரைவில் தமிழகத்தின் அனைத்து Cable TV மற்றும் கட்டண DTH களில் இடம் பெறும்.
அலைவாிசை விபரங்கள்
Satellite Intelsat20@68.5E(C-Band)
Freq Rate 4024
Symbol Rate 21600
Polar Vertical
System Mpeg4/Dvb s2 ( 8PSK)
Encryption Pay/Irdeto2
Fec 3/4
Post a Comment