Home » , , » ஜெயா டி.வி. மற்றும் சன் டி.வி.க்கு போட்டியாக அ.இ.அ.தி.மு.க ஆரம்பிக்கும் J TV

ஜெயா டி.வி. மற்றும் சன் டி.வி.க்கு போட்டியாக அ.இ.அ.தி.மு.க ஆரம்பிக்கும் J TV

Written By DTH News on 12 March 2018 | 8:58 PM

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்நாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் நான்கு புதிய தொலைக்காட்சி சேனல்களை தொடங்க திட்டமிட்டுள்ளது.

பொது பொழுதுபோக்கு சேனல் 'ஜே டிவி' (J TV) என்றும் மேலதிகமாக இசை(MusicJ), திரைப்படங்கள்(MoviesJ) மற்றும் நியூஸ்(NewsJ) ஆகிய மூன்று சேனல்களும் இருக்கும்.

செய்தி சேனலின் வலைத்தளம் 'newsj.tv' ஆக இருக்கும், இது இப்போது ஒரு முகப்பு பக்கமாக உள்ளது. சேனல்கள் அடுத்த மூன்று மாதங்களில் ஒளிபரப்பைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பல மாதங்களாக சேனல் ஆரம்பிப்பதற்கான பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜனவரி மாத தொடக்கத்தில் அ.தி.மு.க. தலைவர்  பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்  அதன் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்தபோது இந்த ​​செய்திகளை முதலில் வெளியிட்டனர்.

அந்த நிகழ்வில் "நமது அம்மா" அல்லது "எங்கள் தாய்" என்று அழைக்கப்படும் ஒரு பத்திரிகை மற்றும்  நான்கு டிவி சேனல்கள் எமதுகட்சி தொடங்கும்  என்று சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கூறினர்.

தமிழ்நாட்டில் நீண்ட பாரம்பரியம் கொண்ட அரசியல் கட்சிகளில் ஓன்று  தங்கள் சொந்த செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களை விரைவில் ஆரம்பிக்கும்.
j tv

தி.மு.க "முரசொலி" அல்லது 'Call of the Horn' என்ற பத்திரிகையை  கருணாநிதியின் மருமகன் மாறன் தலைமையில் வைத்திருந்தது.

அவரது மகன் தயாநிதி மாறன், செய்தி ஊடகத்தை சன் டிவிக்கு விரிவுபடுத்தினார், 2008 மாறன் சகோதரர்கள் தமது மாமாவுடன் இருந்து பிரியும்வரை தி.மு.க வின் முக்கிய ஊடகமாக சாம்ராச்சியமாக இது திகழ்ந்தது.

இதைத் தொடர்ந்து தி.மு.க கருணாநிதி பெற்ற புனைப்பெயரில் கலைஞர் டிவி, கலைஞர் செய்தி, முரசு, இசையருவி, சித்திரம் போன்ற சேனல்களை உடைய ஊடக சாம்ராச்சியம் ஒன்றை உருவாக்கியது. இதனை தற்போது  அ.இ.அ.தி.மு.க செய்ய முயல்கிறது.

சன் டி.வி.வை எதிர்த்து, ஜெயா டி.வி மற்றும் ஜெயா நியூஸ் போன்ற பல சேனல்களைத் தொடங்கினார் ஜெயலலிதா.

ஆனால் இந்த சேனல்களின் கட்டுப்பாடு இப்போது சசிகலா பிரிவினர்  வசமுள்ளது. இதுவே இப்போது அ.தி.மு.க. அதிகாரபூர்வமாக 'ஜே.டி.வி' ஐ ஆரம்பிக்க  கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சசிகலா பிரிவுக்கும், பா.ஜ.க.வின் ஆதரவைப் பெற்றதாகக் கூறப்படும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி தலைமையிலான 'அதிகாரபூர்வமான' பிரிவினருக்கும் இடையேயான பதட்ட நிலைமையில் மத்திய வரி அமலாக்க அமைப்புகள் நவம்பர் மாதம் ஜெயா டி.வி வளாகத்தில் பலவிதமான சோதனைகளை நடத்தியாமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் பல அரசியல்வாதிகள் ஏற்கனவே தம்வசம் ஒவ்வொரு தொலைக்காட்சி சேவைகளை வைத்துள்ள நிலையில்  தமிழக அரசியலில் புதிதாக நுழைந்த கமல் ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரும் இனிவரும் காலங்களில் தமது தொலைக்காட்சி சேவைகளை ஆரம்பிப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதை  எதிர்வுகூறி பதிவு செய்கிறது எமது இணையத்தளம்.

-தொகுப்பு-
-ச.பிரதீஸ்வரன்-




Share this article :

Post a Comment

 
Support : DTH News | DTH News 1st | DTH News 1st
Copyright © 2021. DTH News - All Rights Reserved
Template Created by Pratheeswaran Published by DTH News
Proudly powered by DTH News 1st