Home » , , , , , » டிஸ்கவரி ஜீட் தமிழ் சேனல் ஒரு அலசல்

டிஸ்கவரி ஜீட் தமிழ் சேனல் ஒரு அலசல்

Written By DTH News on 14 February 2018 | 9:53 PM

டிஸ்கவரி இந்தியா வலையமைப்பானது அமெரிக்காவை கொண்டியங்கும் Netflix எனும்மா பெரும் வலையமைப்புடன் இணைந்து டிஸ்கவரி ஜீட் எனும் புதிய தொலைக்காட்சியை 12.02.2018 அன்று இந்தியா முழுவதும் ஒளிபரப்பை தொடங்கிவைத்தது.

Netflix நிறுவனம் 190 இற்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தமது VOD சந்தாதாரர்களுக்கு 09.01.2018 அன்று டிஸ்கவரி ஜீட்சின்னத்தை அறிமுகம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
discovery jeet

"நாங்கள் Netflix உடன் இணைந்திருக்கிறோம். ஏனென்றால் உலகளாவிய தடத்தில் நாங்கள் கால்பதிக்கவும், அதை சிதைவுறாமல் பார்த்துக்கொளவும், அதனை ஒத்த விடயங்களை எம் நிறுவனத்துடன் இணைத்துக்கொள்ளும் தேவைப்பாடும் எமக்குள்ளது என்றும், டிஸ்கவரி ஜீட் அதன் முதல் வருடத்தில் 1,000 மணி நேரம் அசல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும்" என்று டிஸ்கவரி வலையமைப்பின் மூத்த துணைத் தலைவரும் தெற்கு ஆசியாவின் பொது மேலாளருமான கரன் பஜாஜ் அதன்தெ தொடக்க விழாவில் தெரிவித்தார்.

டிஸ்கவரி ஜீட் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில்  தமது நிகழ்சிகளை  கண்டுகளிக்கும் வகையில் தமது ஒளிபரப்பை செய்யவுள்ளது. இந்த பொழுதுபோக்கு தொலைக்காட்சி 100மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை சென்றடைவதுடன், ஸ்டார் ப்ளஸ், கலர்ஸ், ஜீ டிவி மற்றும் சோனி என்டர்டெயின்மன்ட் சேனல்களுக்கு போட்டியாகவும் அமைய வாய்ப்பிருக்கிறது. 
discovery jeet

டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸ் இந்தியாவின் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் துணைத் தலைவரும்  தலைவருமான சமீர் ராவ் கூறுகையில், "டிஸ்கவரி ஜீட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்சிகள் உண்மைக் கதைகளின்  தத்ரூபமான காட்சிகளாக வடிவமைக்கப்பட்டிருக்கும் என்றார்."

டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸ் தற்போது டிஸ்கவரி சேனல், TLC., அனிமல் பிளானட், டிஸ்கவரி எச்.டி வோர்ல்ட், டிஸ்கவரி science, டிஸ்கவரி டர்போ, டிஸ்கவரி கிட்ஸ் மற்றும் Dஸ்போர்ட்ஸ் சேனல்களை ஒளிபரப்பி வருகிறது. அண்மையில், யூடியூப், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ப்ளே வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் இணைந்து நான்கு முக்கிய டிஜிட்டல் சேனல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

-தொகுப்பு-
-ச.பிரதீஸ்வரன்-

டிஸ்கவரி ஜீட் தொலைக்காட்சியை கீழுள்ள செய்மதி மற்றும் கேபிள் தொலைக்காட்சி வலையமைப்புக்களில் காணமுடியும்.
DTH
Tata Sky channel number 155
Videocon D2H channel number 111
Airtel Digital TV channel number 135
Dish TV channel number 126

Digital Cable
DEN channel number 106
Hathway channel number 10
GTPL channel number 8
FastWay channel number 10
NXT Digital channel number 212
SCOD18 channel number 107
7Star channel number 6
Homecable channel number 8
JPR channel number 108
SITI channel number 110/113
ACN channel number 15
ICC Pune channel number 73
Digiana channel number 141
Sangli Media Comm channel number 106
Share this article :

Post a Comment

 
Support : DTH News | DTH News 1st | DTH News 1st
Copyright © 2021. DTH News - All Rights Reserved
Template Created by Pratheeswaran Published by DTH News
Proudly powered by DTH News 1st