இந்தியாவின் முன்னணி மல்ட்டி-மீடியா பொழுதுபோக்கு நிறுவனமான வயாகாம்-18 மீடியா பிரைவேட் லிமிடெட்., தனது தமிழ் பொது பொழுதுபோக்கு சேனல், ‘கலர்ஸ் தமிழ்’ என்ற பெயரில் விரைவில் தொடங்குவதை இன்று அறிவித்திருக்கிறது.
சென்னையில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் வயாகாம்18-ன் குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் திரு.சுதான்ஷு வாட்ஸ், அதன் பிராந்திய பொழுது போக்குத் துறையின் தலைவர் திரு.ரவீஷ்குமார் மற்றும் கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. அனுப் சந்திரசேகரன் ஆகியோரால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கோலிவுட்டின் பிரபல நடிகரான ஆர்யாவை தனது பிராண்டு தூதராக இந்த சேனல் நியமனம் செய்திருக்கிறது. இந்த சேனலில் ஒளிபரப்பாகவுள்ள, அவரது வாழ்க்கைத் துணையை சந்திப்பதற்கான ஒரு நிகழ்ச்சியான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்பதிலும் ஆர்யா பங்கேற்கிறார்.
பொழுது போக்குக்கான ஒரு நிறுத்த அமைவிடமாக திகழவிருக்கும் இந்த சேனல், பல்வேறு பிரிவுகளில் தனித்துவமான சிறப்பான நிகழ்ச்சிகளின் அணி வரிசையின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஆர்வமூட்டும் கதைகளையும், நிகழ்ச்சிகளையும் வழங்கவிருக்கிறது.
பிராந்திய கேளிக்கை, பொழுது போக்கு தளத்தில் ஒரு புது இரத்தத்தை பாய்ச்சும் வகையில் ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் மற்றும் குறிப்பாக பெண்களுக்கும், என்றும் நினைவுகூரத்தக்க அனுபவத்தை வழங்குவதை தனது நோக்கமாக இது கொண்டிருக்கிறது.
ஊக்கமளிக்கும் கதை, குடும்பக் கதை, ஃபேன்டசி மற்றும் ரியாலிட்டி டிவி ஷோ என மாறுபட்ட பல வகையினங்களில் வழங்கப்படவுள்ள நிகழ்ச்சிகளும், நெடுந்தொடர்களும் இந்த சேனலில் முன்னிலை வகிக்கும்.
ஒவ்வொரு தமிழருக்கும் அறுதியான ஒரு பொழுதுபோக்கு அமைவிடமாக இதை ஆக்குவது என்ற குறிக்கோளோடு இச்சேனலின் நிகழ்ச்சிகள் அமையவிருக்கின்றன.
இந்த நிகழ்ச்சியில் ‘வயாகாம்-8’ நிறுவனத்தின் பிராந்திய என்டர்டெய்ன்மெண்ட்-ன் தலைவர் ரவீஷ்குமார் பேசுகையில், “இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 6-வது மாநிலமாக திகழும் தமிழ்நாடு, இந்நாட்டின் மிகப் பெரிய தொலைக்காட்சி நுகர்வு சந்தைகளுள் ஒன்றாக இருக்கிறது.
‘கலர்ஸ் கன்னடா’ சேனலின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, கதை சொல்லும் அம்சம் மட்டுமின்றி விளம்பரதாரர்கள் என்ற விஷயத்திலும்கூட தமிழ்நாடு பொழுது போக்கு தொழில் துறை வழங்கக் கூடிய மிகப் பெரிய வாய்ப்பினை திறம்பட பயன்படுத்திக் கொள்ள நாங்கள் விரும்பினோம்.
தற்போது ஒளிபரப்பாகும் பொழுது போக்கு சந்தை மீதான எங்களது ஆய்வு, பார்வையாளர்கள் பார்க்க விரும்புவதற்கும், அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய படைப்புகளுக்குமிடையே ஒரு பெரிய இடைவெளி இருப்பதை சுட்டிக் காட்டுகிறது.
இம்மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த மக்களுக்கு பொழுது போக்கை அளிப்பதும், வாழ்க்கையை வளமாக்குவதும் மற்றும் ஆர்வத்தோடு ஈடுபாடு கொள்ளச் செய்வதற்குமான ஒரு தளமாக இது இருக்கும்.
‘இது நம்ம ஊரு கலரு…. நமது மண்ணின் கலர்ஸ்’ என்ற எமது டேக் லைன், எமது சேனலின் குறிக்கோளை மிக சுருக்கமாக எடுத்துச் சொல்கிறது.
வித்தியாசமான, சிந்தனையைத் தூண்டுகிற மற்றும் சமூக உணர்வுமிக்க படைப்புகளை எங்களுடைய சேனல் தமிழக மக்களுக்கு வழங்கவிருக்கிறது..!” என்று பெருமையுடன் கூறினார்.
கலர்ஸ் சேனலின் தமிழ் – பிசினஸ் ஹெட் திரு. அனுப் சந்திரசேகரன் பேசுகையில், “எங்களது கலர்ஸ் சேனல் தமிழ் மொழி, கொண்டாட்டம் மற்றும் ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளை வழங்கவிருக்கிறது. புதிய மற்றும் இதுவரை தொலைக்காட்சி வரலாற்றில் தமிழகத்து மக்கள் ஒருபோதும் காணாத நிகழ்ச்சிகளை அவர்களுக்கு வழங்குவதே எங்களது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.
ஆகவே, ஊக்கமளிக்கிற, புதுமையான, பரிசோதனை ரீதியிலான மற்றும் தொழில் நுட்ப ரீதியில் சிறப்பான நிகழ்ச்சிகளை கருத்துருவாக்கம் செய்வதில் நாங்கள் பெரியளவில் முதலீடு செய்திருக்கிறோம்.
அனைவரையும் ஈர்க்கிற அம்சங்கள் கொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தாக்கங்கள் வழியாக ஒரு குடும்பத்திலுள்ள அனைவரும் ஒருங்கிணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதை ஊக்குவிப்பதாக எங்களது முயற்சியும், செயல்பாடும் இருக்கும்.
பெண்களுக்கு உத்வேகமளிக்கிற, அவர்களை கொண்டாடுகின்ற வலுவான கதைகளை நாங்கள் வழங்கவிருக்கிறோம். எங்களது இந்த சீரிய முயற்சியில் இணைந்திருக்கிற எமது கூட்டாளிகள், பணியாளர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி கூற நான் விரும்புகிறேன்.
மிகப் பெரிய வெற்றியை ஈட்டுவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். கலர்ஸ் தமிழ் சேனலின் பிராண்டு தூதராகவும் மற்றும் அவரது வாழ்க்கைத் துணையை தேடுவதற்கான அவரது முயற்சியில் எமது சேனலில் இணைந்திருப்பதற்காகவும் நடிகர் ஆர்யா அவர்களுக்கு எங்களது சிறப்பான நன்றிகள்.
கலர்ஸ் தமிழின் முத்திரை பதித்த நிகழ்ச்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற ரியாலிட்டி ஷோவில் பிராண்டின் விளம்பர தூதரும் மற்றும் கோலிவுட் சூப்பர் ஸ்டாருமான ஆர்யா அவர்களுக்கு ஏற்ற, சிறந்த, பொருத்தமான மணப் பெண்ணை தேடுவது உள்ளடங்கும்.
40-க்கும் மேற்பட்ட தொடர்களைக் கடந்திருக்கும் இந்த ஷோவில் இதயம் கவர்ந்த நாயகனுக்கு ஏற்ற அழகான மணப்பெண் தேடுவது ஒளிபரப்பப்படும்…” என்றார்.
actor aarya
சேனலின் விளம்பர தூதர் நடிகர் ஆர்யா கூறுகையில், “கலர்ஸ் தமிழ் சேனலுடன் எனது பங்களிப்பு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியும், வியப்பும் அடைகிறேன்.
‘வயாகாம்18’-ன் கலர்ஸ் என்பது, ஊடகம் மற்றும் கேளிக்கை துறையில் மிகவும் மதிக்கப்படும் பிராண்டு ஆகும். தனது தனித்துவ தன்மை மற்றும் பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளைக் கொண்ட இந்த சேனல் வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டு நிற்கும் என்பது உறுதி.
‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற எனக்கு ஏற்ற பொருத்தமான பெண் பார்க்கும், ஒரு புதுமையான ஷோ பற்றி நான் மிகவும் உற்சாகம் கொண்டிருக்கிறேன்,” என்றார்.
வார இறுதி நாட்களில், போட்டியிடும் நோக்கமில்லாமல் இளைஞர்கள் அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்திக்காட்டுவதற்கு ஒரு சரிசமமான, நன்கு தகுதியுடைய மேடையை அவர்களுக்கு வழங்குவதற்கு இளம் மனங்களுக்கு ஏற்ற ஒரு புதிய நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.
‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’ என்பது, குழந்தைகளுக்கு உள்ள இயல்புக்கு மீறிய வியத்தகு திறமைகளை கொண்டாடுவதற்கு ஒரு மேடையை வழங்கும் ஒருவகை உத்வேகமான, கல்வி புகட்டக் கூடிய மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த டேலண்ட் ஷோ ஆகும்.
கலர்ஸ் தமிழ், அதன் கற்பனை அணிவரிசையின் ஒரு பகுதியாக சமுதாயத்தின் விலங்கை உடைக்கும் பலம் வாய்ந்த பெண் கதாபாத்திரங்களை காட்டும் மூன்று கருத்தைக் கவரும் நிகழ்ச்சிகளை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டு மண் வாசணை பதிந்த இடங்களில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பார்ப்பவர்களுக்கு ஒரு திரைப்படத்தை பார்ப்பது போன்ற அனுபவத்தை தரும் என்பது நிச்சயம்.
பொதுவான நெடுந்தொடர் நிகழ்ச்சிகளிலிருந்து ஒரு மாறுபட்ட கதை கொண்ட ‘வேலு நாச்சி’ என்னும் தொடர், சிலம்பாட்டத்தில் தன்னுடைய தந்தை வழியைப் பின்பற்றி முன்னெடுத்துச் செல்லும் ஒரு வீரமிக்க பெண்ணாக தன்னை மாற்றிக் கொள்ளும் இளம்பெண்ணின் ஒரு உத்வேகக் கதையாகும்.
‘சிவகாமி’ என்னும் தொடர், ஒரு வெற்றிகரமான ஐ.பி.எஸ். அதிகாரியாக தன்னுடைய மகனை வளர்த்து உருவாக்குவதற்கு, சமுதாயத்தில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் ஒரு இளம் பெண்ணின் வீரக் கதையாகும்.
மண்வாசனை மற்றும் நாட்டுப்புற பாரம்பரியம் கொண்ட ஊரக தமிழ்நாட்டின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கதையின் நோக்கம் மக்களின் மனநிலையில் அனுகூலமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும்.
‘பேரழகி’ என்னும் தொடர், தோலின் நிறத்தைச் சுற்றி ஒரே மாதிரியாக வரும் பாணியை மாற்றி, ஒரு பிரபலமான நபராக உருவாக வேண்டும் என்பதற்காக வரக் கூடிய அனைத்து பிரச்சினைகளையும் எதிர்த்து போராடக் கூடிய ஒரு சாதாரண பெண்ணின் வாழ்க்கைக் கதையை கூறுகின்றது.
வரும் பிப்ரவரி 19-ம் தேதியன்று, ‘இது நம்ம ஊரு கலரு’ என்ற பெயரில் நடைபெறுகின்ற 3 மணி நேர நிகழ்வின் மூலம் இந்த சேனலின் தமிழ் ஒளிபரப்பு ஆரம்பமாகிறது.
பிப்ரவரி 20-ம் தேதியிலிருந்து கலர்ஸ் தமிழ் சேனலின் நிகழ்ச்சிகளை நீங்களும் பார்க்கலாம்..!
நிகழ்ச்சிகள் | நாள் | நேரம் |
வேலுநாச்சி | திங்கள் முதல் வெள்ளி வரை | 18:30 |
நாகினி 2 | திங்கள் முதல் வெள்ளி வரை | 19:00 |
சிவகாமி | திங்கள் முதல் வெள்ளி வரை | 20:00 |
எங்க வீட்டு மாப்பிள்ளை | திங்கள் முதல் வெள்ளி வரை | 20:30 |
பேரழகி | திங்கள் முதல் வெள்ளி வரை | 21:30 |
காக்கும் தெய்வம் காளி | சனி – ஞாயிறு | 19:00 |
கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் | சனி – ஞாயிறு | 20:00 |
‘வயாகாம்-18 மீடியா பிரைவேட் லிமிடெட்’ இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் என்டர்டெயின்மென்ட் வலையமைப்புகளுள் ஒன்றாகும்.
பல செயல் தளங்களில் பல தலைமுறைகளுக்கான பல கலாச்சார பிராண்டு அனுபவங்களை வழங்கி வருகிற வலுவான பிராண்டுகளின் தாயகமாக இது திகழ்கிறது.
51% பங்குகளை கொண்டிருக்கும் டிவி-18 மற்றும் 49% பங்குகளை கொண்டிருக்கும் ‘வயாகாம்-18’ ஆகிய இரு பெரு நிறுவனங்களின் கூட்டு முயற்சி நிறுவனமான ‘வயாகாம்-18’, சினிமா வழியாகவும் மற்றும் ஆன்லைன், வானொலி மற்றும் கள அளவில் கொண்டிருக்கும் தனது ஆதார வளங்களின் மூலமாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைகிறது.
தொடக்க நாளிலிருந்தே, தமிழ்நாடு அரசு கார்ப்பரேஷன் வழியாக சென்னையைத் தவிர்த்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் 11 மில்லியன் இல்லங்களில் அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகள் மூலம் ‘கலர்ஸ் தமிழ்’ சேனலை காணலாம்.
SCV, TCCL மற்றும் பிற நிறுவனங்கள் வழியாக பெருநகர சென்னையில் 3.5 மில்லியன் இல்லங்களையும் இது சென்றடையும்.
இதற்கும் கூடுதலாக இந்த சேனல், சன் டைரக்ட், டாடா ஸ்கை, ஏர்டெல், டிஷ் டிவி மற்றும் வீடியோகான் D2h ஆகிய அனைத்து DTH செயல்தளங்கள் வழியாக ‘5.5 மில்லியன் குடும்பங்களுக்கு காணக் கிடைக்கும்.
ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு இச்சேனலின் நிகழ்ச்சிகள் வயாகாம்18 டிஜிட்டல் தளமான VOOT-ல் கிடைக்கும்.
Post a Comment