ஒரு காலகட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு இருந்த தமிழ் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை 2018 இல் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. அந்தவகையில் சண் டிவி இன் GRP இதன் காரணமாக குறைந்துகொண்டே செல்வதாக அறியமுடிகிறது.
சண் டிவி இல் வெறுமனே தொலைக்காட்சி நெடுந்தொடர்களை மாத்திரமே ஒளிபரப்பு செய்வதனால் தங்களுடைய GRP குறைவடைந்திருக்கலம் என சண் டிவி கருதுகின்றது. இதற்கு மாற்றாக இளைஞர்களை கவரும்விதமாக நிகழ்சிகளுடன் புதிதாக ஒரு தொலைக்காட்சியை தொடங்குவது என சண் குழுமம் திட்டமிட்டிருந்தது. அதன்படி 2018 செப்டம்பர் மாதமளவில் அந்த தொலைக்காட்சியை ஆரம்பிக்கலாம் என சன்குழுமம் திட்டமிட்டிருந்தது.
இதற்காக இவர்கள் தற்பொழுது பழைய மற்றும் இடைக்கால பாடல்கள், திரைப்படங்களை ஒளிபரப்பிவரும் சண் லைப் தொலைக்காட்சியை வருகின்ற அக்டோபர் மாதம் 07ம் திகதி தமது இரண்டாவது பொழுதுபோக்கு தொலைக்காட்சியாக மாற்றியமைக்க சண் குழுமம் திட்டமிட்டுள்ளது. இந்த சண் லைப் தொலைக்காட்சி ஆரம்பத்தில் சன் டைரக்ட் DTH இல் மட்டுமே தமது ஒளிபரப்பை தொடங்கி பின்னர் செய்மதி தொலைக்காட்சியாக மற்றம் செய்யபட்டது.
ஏன் இவர்கள் இந்த சண் லைப் தொலைக்காட்சியை இவ்வாறு மாற்ற திட்டமிட்டுள்ளார்கள் என ஆராய்ந்து பார்த்தால், இந்த சண் லைப் தொலைக்காட்சி சண் குழுமம் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபல்யம் அடையவில்லை என்பதே. எனினும் தற்போது கூட நிறைய வீடுகளில் சண் லைப் தொலைக்காட்சியை விரும்பி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது உண்மை.
ஒரு குறிப்பிட்ட வயது வர்க்கத்தினருக்கு மாத்திரமே விருப்பமான சண் லைப் தொலைக்காட்சி இனிமேல் சண் டிவி இன் இரண்டாவது பொழுதுபோக்கு தொலைக்காட்சியாக உருவாகப்போகின்றது.
சண் டிவி இன் இரண்டாவது பொழுதுபோக்கு தொலைக்காட்சிக்கு புதிய பெயர்வைக்க போகிறார்களா அல்லது சண் லைப் என்ற அதே பெயரில்தான் ஒளிபரப்பப்படுமா என்பது பற்றிய தகவலை சண் குழுமம் இன்னும் அறிவிக்கவில்லை.
Post a Comment