நண்பர்களே தென்னிந்தியாவின் தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு புதிதாக யூடெல்சாட்70பி செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது. இப்புதிய செயற்கைகோளில் இந்தியா தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இதில் 18 ற்கும் மேற்பட்ட தமிழ் தொலைக்காட்சிகளை கண்டு மகிழலாம்.
இத்தொலைக்காட்சிகளின் அலைவரிசை சோதனை ஒளிபரப்பு என்பதால் ஒளிபரப்பில் மாற்றங்கள் ஏற்படலாம். கேரளா மாநிலம் கொச்சியில் செயல்படும் ஈசால் சியாம் செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.
அலைவரிசை சிக்னலை பெற 60 செமீ முதல் 90 செமீ கேயூ டிஷ்ஆன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சிகளை காணலாம். MPEG4/DVB S2 தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ் பயன்படுத்த வேண்டும். இச்செயற்கைகோளில் இலங்கை நாட்டின் டான் தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடதக்கது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite Eutelsat70B@70.5E(Ku-band)
Freq Rate 11355
Synbol Rate 44900
Polar Vertical
Modulation Mpeg4/Dvb s2
Mode Fta
Satellite Eutelsat70B@70.5E(Ku-band)
Freq Rate 11294
Synbol Rate 44900
Polar H
Modulation Mpeg4/Dvb s2
Mode Fta
Post a Comment