பிரித்தானியாவின் தலைநகர் லண்டனை தலைமையாகமாக கொண்டு கடந்த 16 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகும் தீபம் தொலைக்காட்சி ஆசியா நாடுகளிற்கான தனது ஒளிப்பரப்பை நேற்று முதல் ஆரம்பித்துள்ளது.
Eutelsat 70E செய்மதி வழியாக ஒளிப்பாகும் இந்த சேவையினை வட ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மியன்மார் உள்ளிட்ட அனைத்து தென்னாசியா நாடுகளிலும், மொத்தமாக 62 நாடுகளில் தெளிவாக இலவச ஒளிப்பரப்பை பார்க்க முடியும். இது தீபம் தொலைக்காட்சியின் ஏழாவது ஒளிபரப்பு தளமாகும்.
ஏற்கனவே தீபம் தொலைக்காட்சி Eurobird 9 செய்மதி வழியாக ஐரோப்பா மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் உள்ள ஏறத்தாழ 64 நாடுகளை சென்றடைகின்றது, இவற்றுக்கு மேலதிகமாக பிரான்ஸில் Free Box வழியாகவும்.சுவிஸில் Swisscom இன் தொலைக்காட்சி சேவையுடாகவும். டுபாய் அபுதாபி உள்ளடங்கிய ஐக்கிய அரபு ராச்சியத்திற்கு (UAE) Etisalat இன் தொலைகாட்சி சேவையூடாகவும் ஒளிபரப்பாகின்றது, அது தவிர DBX என்னும் இணைய வழி தொலைக்காட்சி சேவையூடாகவும் (IPTV) இணையத்தளம் வழியாகவும் உலகம் முழுதும் பார்க்க முடியும். இதுதவிர விரைவில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளிலும் தீபம் தொலைக்காடசியை பார்க்க முடியும்.
இலங்கை தமிழ் தொலைக்காட்சிகளில் தீபம் தொலைக்காட்சி மட்டுமே ஏழிற்கும்கு அதிகமான ஒளிப்பரப்பு தளங்களில் மூலம் ஒளிப்பரப்பட்டு உலகின் அதிகளவான நாடுகளை சென்றடைகின்றது.
தீபம் தொலைக்காட்சியின் தென்னாசியாவிற்கான ஒளிப்பரப்பை தெளிவாக பார்க்க முடிவதாக இலங்கை இந்தியாவில் உள்ள தீபம் தொலைக்காட்சியின் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனார்.
இலங்கை, இந்தியாவில் செய்மதி வழி தீபம் ஒளிபரப்பை பார்வையிட
Channel name Deepam TV
Satellite Eutelsat 70B @ 70.5E
frequency 11356,
Polarization vertical
symbol rate 44900
Post a Comment