சன் டிவி நிறுவனத்திற்கு சொந்தமான 33 சேனல்களுக்கான அங்கீகாரத்தை புதுபிக்க மத்திய உள்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் ஒளிபரப்பு உரிமம் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாறன் சசோதரர்களுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பாதுகாப்பு சான்று அளிக்க உள்துறை மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாநிதி மாறன் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது சுமார் 300 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை சன் டிவி குழுமத்திற்காக முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
இதைத் தவிர ஏர்செல் மேக்சிஸ் வழக்கும், பணம் பதுக்கல் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளன. தனது ஒளிபரப்பு உரிமத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க சன் டிவி குழுமம் விண்ணப்பித்திருந்தது.
இதற்கு மத்திய உள்துறையின் பாதுகாப்பு அனுமதி பெறப்படவேண்டும். உள்துறை அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் இதுகுறித்து தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகமே இறுதி முடிவெடுக்கவேண்டும் என கூறப்படுகிறது.
முன்னதாக சன் குழுமத்தால் நடத்தப்படும் எப் எம் வானொலி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு சான்றளிக்க மத்திய உள்துறை மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து சன் குழுமம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை பெற்றது.
அடுத்து சன் டேரைக்ட் வாடிக்கையாளர்களே நீங்க உங்க பாக்ஸ் மாத்த வேண்டிய சூழ் நிலை வந்துருச்சு. ரெடியா இருங்க.
Post a Comment