இந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான சன் நெட்வொர்கின் 33 சேனல்கள் மீதான உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஒப்புதல் மறுப்பை, பிரதமர் அலுவலகமும் (PMO) ஆதரித்துள்ளது. இதனால் சன் நெட்வொர்க் தனது ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சன் நெட்வொர்க் நிறுவனம் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்குகளின் காரணமாக உள்துறை அமைச்சகம், இந்நிறுவனத்தின் 33 சேனல்கள் மீதான பாதுகாப்பு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
இவ்விவகாரத்தை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமை வகிக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மறுபரிசீலனை செய்யுமாறு உள்துறை அமைச்சகக்திற்கு வேண்டுகோள் விடுத்தது.
இந்நிலையில் பிரச்சனையை விரைவாகத் தீர்க்கவும், பாதுகாப்பு ஒப்புதல்களைப் பெறவும் பிரதமர் அலுவலகத்தைச் சன் நெட்வொர்க் நிறுவனம் நாடியது. தற்போது பிரதமர் அலுவலகமும், உள்துறை அமைச்சக அறிவிப்பிற்குச் சாதகமான பதில் கூறியுள்ளதால், சன் நெட்வொர் தனது ஒளிபரப்புத் நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஊழல் வழக்கில் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளதால், இந்நிறுவனத்தின் மீதான பாதுகாப்பு ஒப்புதல் மறுப்பை ஏற்க முடியாது. மேலும் இது சட்டத்திற்குப் புறம்பானது என வழக்கறிஞர் ஜெனரல் முகுல் ரோஹட்கி தெரிவித்தார்.
இதுகுறித்துப் பிரதமர் அலுவலகத்தின் செயலாளர் நிர்பென்திரா மிஸ்ரா, சன் டிவி குறித்த முடிவுகள் உள்துறை அமைச்சகத்தின் முடிவு சரியானதாகவே உள்ளது எனக் கூறினார். இதனால் சன் டிவி நிறுவனத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சன் டிவி நிறுவன பங்குகள் மும்பை பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகத்தில், 10 சதவீதம் வரை சரிந்து 291.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Post a Comment