Home » , » மதிமுகம் புதிய தொலைக்காட்சி இன்டல்சாட்17 செயற்கைகோளில் உதயம்

மதிமுகம் புதிய தொலைக்காட்சி இன்டல்சாட்17 செயற்கைகோளில் உதயம்

Written By DTH News on 24 May 2016 | 7:54 PM

நண்பர்களே தமிழகத்தில் புதிய பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சி மதிமுகம் டிவி என்ற பெயரில் ஒளிபரப்பு தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது. 
MADHIMUGAM TAMIL TV

நமது தளத்தில் கடந்த மாதத்தில் வெளியிடப்பட்ட தகவலில் இரண்டு புதிய தமிழ் தொலைக்காட்சிகளான மதிமுகம் மற்றும் மாலை முரசு தொடங்கப்படும் என்று குறிப்பிட்டதை போன்று முதிமுகம் தொலைக்காட்சி செயற்கைகோள் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. மாலை முரசு தொலைக்காட்சியின் ஒளிபரப்பு கடந்த மாதத்தில் இன்டல்சாட்17யில் தொடங்க்கப்பட்டதை போன்று இத்தொலைக்காட்சியும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் ஒளிபரப்பாகி வந்த ஹிந்தி மீயூசிக் தொலைக்காட்சியான யோ டிவியின் ஒளிபரப்பு உரிமத்தில் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. 

தற்சமயம் தமிழ் திரைப்பாடல்களுடன் தொடக்கசோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும். மதிமுகம் தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பாக இன்டல்சாட்17யில் தொடங்கப்பட்டுள்ளது.

அலைவாிசை விபரங்கள்;
Satellite                        Intelsat17@66.0E(C-Band)
Freq Rate                     3933
Symbol Rate                18333
Polar                             Horizontal
Modulation                   Mpeg4/Dvb s2(8PSK)
Mode                            Fta
Share this article :

+ comments + 3 comments

June 6, 2016 at 6:16 PM

இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள் !!!

June 16, 2016 at 9:10 AM

மதிமுகம் மக்களுக்காய் செயல்பட வாழ்த்துக்கள்

July 13, 2016 at 10:01 AM

இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள் !!!

Post a Comment

 
Support : DTH News | DTH News 1st | DTH News 1st
Copyright © 2021. DTH News - All Rights Reserved
Template Created by Pratheeswaran Published by DTH News
Proudly powered by DTH News 1st