டுபாயில் இருந்து பங்களாதேஷில் 24 மணித்தியாலங்களாக ஔிப்பரப்பப்படும் பீஸ் டீ.வி (Peace TV) என்ற செய்மதி தொலைக்காட்சி சேவையை தடை செய்ய பங்களாதேஷ் அரசு தீர்மானித்துள்ளது.
குறித்த தொலைக்காட்சியின் ஊடாக அந்நாட்டு இளைஞர்கள் தீவிரவாதத்திற்கு ஈர்க்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை இதற்கு காரணமாகும்.
இம்மாதத்தின் ஆரம்பத்தில் பங்களாதேஷ் டாக்கா தலைநகரின் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்திருந்தனர்.
அதனை தொடர்ந்தே பங்களாதேஷ் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த தொலைக்காட்சி சேவை இந்நாட்டு அரசியலமைப்புக்கும் மற்றும் கலாச்சாரத்திற்கு பொருத்தமற்றது என அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-நன்றி -
-Hiru News-
Post a Comment