நண்பர்களே இலங்கை நாட்டில் தொடங்கவிருக்கும் புதிய டிடிஎச் சேவையான டிஷ்டிவி லங்கா தற்சமயம் இலங்கை நாட்டின் தமிழ் மற்றும் சிங்களா மொழி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை சீஸ்7 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் இலங்கை நாட்டின் அரசு தொலைக்காட்சியான ரூபாவாஹினி மற்றும் நேத்ரா தமிழ் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இப்புதிய டிடிஎச் சேவைக்கான தொழில்நுட்பபணிகள் நடைபெற்று வருகிறது.தொலைக்காட்சிகள் மிக எளிய தொழில்நுட்பமான MPEG2/DVB S1 வடிவத்தில் தொடங்கப்பட்டுள்ளது.தற்காலிக இலவச தொலைக்காட்சிகளாக தொடங்கப்பட்டுள்ள இதன் ஒளிபரப்பு எவ்வித நேரங்களிலும் இடைநிறுத்தம் செய்யப்படலாம்.இலங்கை நாட்டின் முன்னனி தொலைக்காட்சிகள் டிஷ்டிவி லங்காவில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
அலைவரிசை விபரங்கள்;
Satellite SES7@95.0E(KU-BAND)
Freq Rate 12172
Symbol Rate 40700
Polar Horizontal
Modulation Mpeg2/dvb s1
Mode Fta
Post a Comment