ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து 24 மணி நேர தமிழ் வானொலியாக “தாயகம் தமிழ் ஒலிபுரப்பு’ சேவை தொடங்கப்பட்டுள்ளது. சிட்னியில் கடந்த 16-ந் தேதியன்று தாயகம் தமிழ் ஒலிபரப்பு சேவையின் தொடக்க விழா நடைபெற்றது. நவீன தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் முறையில் விஜய் இராஜகோபால் எனும் தமிழ் இளைஞர் இந்த வானொலியைத் தொடங்கியுள்ளார்.
இந்த வானொலிச் சேவையினை www.thayagam.net இணைய தளம் வாயிலாக தற்போது கேட்கலாம். Android apps, Tunein radio apps, Apple apps மூலமாகவும் விரைவில் கேட்கலாம் என்று வானொலி நிர்வாகத்தின் தெரிவித்துள்ளனர்.
Post a Comment