நண்பர்களே இங்கிலாந்து நாட்டின் பொது ஒளிபரப்பு தொலைக்காட்சி சேவை நிறுவனமான பிபிசி செய்தி பிரிவு தன்னுடைய குழுமத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்குகான தொலைக்காட்சி செய்திகள் ஒளிபரப்பு சேவையை தொடங்கியுள்ளது. அந்த வரிசையில் இந்தியா மற்றும் இலங்கை வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் தொடர்பான செய்திகளை பிபிசி தமிழ் தொலைக்காட்சி முலம் இங்கிலாந்து மற்றும் இலங்கை நாடுகளில் மட்டும் இச்செய்திகள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது.
தமிழகத்தின் முன்னனி செய்தி நாளிதழ் தினதந்தி நிறுவனத்தில் இருந்து தொடங்கப்பட்ட தமிழ் செய்திகள் தொலைக்காட்சியான தந்தி டிவி முதன்முறையாக இங்கிலாந்து நாட்டின் பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் செய்திகள் நிகழ்ச்சியை தமிழகத்தில் ஒளிபரப்பு செய்கிறது. இதற்கான ஒப்பந்த பரிவர்த்தனை இருநிறுவனங்கள் சார்பாக கடந்த வருடத்தில் நிறைவடைந்தது. பிபிசி தமிழ் செய்திகள் ஒளிபரப்பை தினந்தோறும் இரவு 7.30 மணி தொடக்கம் காணலாம். பிபிசி நிறுவனத்தின் சார்பாக ஆசியா நர்டுகளுக்கான செயற்கைகோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டு அவற்றில் இதன் செய்திகள் ஒளிபரப்பு இடம் பெறுகிறது. ஆசியாசாட்5@100.5E செயற்கைகோளில் பிபிசி நிறுவனத்தின் அலைவரிசை ஒளிபரப்பு செயல்படுவது குறிப்பிடதக்கது.
Post a Comment