நண்பர்களே உலகின் எலக்ட்ரானிக் துறையில் பல்வேறு விதமான புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதை நாம் அன்றாடம் காணக்கூடியதாக உள்ளது. அந்த வரிசையில் செயற்கைகோள் தொலைக்காட்சி தொழில்நுட்பத்தில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு உலக தொலைக்காட்சி துறையில் புதிய அதிநவின உயர் தொழில்நுட்பமான ஹெச்டி அறிமுகம் செய்யப்பட்டு தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகள் உயர்தர வீடியோ வடிவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இப்புதிய தொழில்நுட்பம் அமெரிக்கா ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளின் செயற்கைகோள் தொலைக்காட்சி துறையில் படிபடியாக மாற்றம் செய்யப்பட்டு வந்தது. இருப்பினும் இத்தொழில்நுட்பத்தை அனைத்து தரப்பு தொலைக்காட்சி நிறுவனங்களும் மாற்றம் செய்யப்படவில்லை. ஒரு சில முன்னனி தொலைக்காட்சிகளே இப்புதிய தொழில்நுட்பத்தில் தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளன.
அந்த வரிசையில் தற்சமயம் அறிமுகம்படுத்தபட்ட புதிய தொழில்நுட்பமான 4கே அல்ட்ரா ஹெச்டி வடிவத்தில் புதிய தொலைக்காட்சிகள் ஆசியாவின் செயற்கைகோள் அப்லிங் ஒளிபரப்பு முனைய நிறுவனங்கள் தொடங்கப்படவுள்ளன. இப்புதிய தொழிலிநுட்பம் தற்சமயம் உள்ள ஹெச்டி தொழில்நுட்பத்தை விட நான்கு மடங்கு துல்லியமான வீடியோவை பார்க்ககூடிய அமைப்பை கொண்டது. அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகளில் 4கே அல்ட்ரா ஹெச்டி தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டு ஒளிபரப்பை வழங்கி வருகிறது.
கடந்த வருடத்தில் மலேசிய நாட்டின் மீயாசாட் செயற்கைகோளில் அல்ட்ரா ஹெச்டி தொழில்நுட்பத்தில் புதிய சோதனை தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. அதே போன்று ஆசியா நாடுகளின் முன்னனி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும் செயற்கைகோள் நிறுவனமான ஆசியாசாட் கம்யூனிகேஷன் இப்புதிய தொழில்நுட்பத்தில் தொலைக்காட்சிகளுக்கான சோதனை ஒளிபரப்பை ஆசியாசாட்4 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர். தொலைக்காட்சியின் ஒளிபரப்பை பெற 4கே அல்ட்ரா ஹெச்டி வசதி பொருந்திய செட்டாப் பாக்ஸை பயன்படுத்த வேண்டும்.இப்புதிய செட்டாப் பாக்ஸ் ஆசியா நாடுகளின் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் வீடியோகான் டிடிஎச் நிறுவனம் இப்புதிய தொழில்நுட்பத்தை கடந்த வருடத்தில் அறிமுகம் செய்தது குறிப்பிடதக்கது.
அலைவரிசை விபரங்கள்
Satellite Asaisat4@122.0(C-Band)
Freq Rate 4130
Symbol Rate 29717
Polar Horizontal
Modulation UHD/Mpeg2/DVB S1
Mode Fta
Post a Comment