Home » » இலங்கையின் உதயம் டிவி HD பெப்ரவரி 01 இல் உதயம்!!!

இலங்கையின் உதயம் டிவி HD பெப்ரவரி 01 இல் உதயம்!!!

Written By DTH News on 27 January 2016 | 8:23 PM

இலங்கை வாழ் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த உதயம் டிவி தமது ஒளிபரப்பை இலங்கையின் சுதந்திரதின மாதமான பெப்ரவரி 01 இல் ஆரம்பிக்கவுள்ளது. 

இலங்கையில் தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்தும் செயற்கைகோள் ஒளிபரப்பு அல்லாது தரைவழி மற்றும் இணையதளம் வயிலாக ஒளிபரப்பாகி வருகிறது. உதயம் டிவியின் ஒளிபரப்பு இலங்கையின் UHF அலைவரிசை 54 இல் விடப்படவுள்ளது. அதுவும் அதி நவீன உயர் தொழிநுட்பத்தில் UHF ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. உதரணமாக சொல்வதனால் இலங்கையின் கிரு டிவி போன்றதொரு மிக தெளிவான ஒளிபரப்பாக இருக்கும். மற்றும் Dialog TV DTH சேவை ஊடாகவும் ஒளிரபரப்ப உள்ளது.

மேலும் செய்மதி ஊடகவும் தனது ஒளிபரப்பை இலவசமாக உலக தமிழர்களுக்காக வழங்கவுள்ளது. அது எந்த செய்மதி என்ற விபரம் அறிய நாம் உதயம் டிவி அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டபோது அது சம்பந்தமான முழுமையான தகவலை எம்மால் பெற முடியவில்லை. எனினும் அது ஒரு தெற்காசியாவை மையப்படுத்திய செயற்கைகோள் (AsiaSat???Eutelsat???) என்ற தகவல் மட்டும் எமக்கு கிடைத்தது.

தற்பொழுது இணையதளம் மூலமாக countdown தொடங்கபட்டுளது. மேலும் இணையதளம் மூலமாக பரீட்சார்த்த ஒளிபரப்பை தொடங்கியிருக்கிறது. இதில் பாடல்களும், செய்தி சுருக்கங்களும், நிகழ்ச்சி முன்னோட்டங்களும் ஒளிபரப்பபடுகின்றது. மேலும் முகப்பு புத்தகம் வாயிலாகவும் செய்திகளை பிரசுரித்து வருகிறது.  இது முழுக்க செய்தி சேவை தொலைகாட்சியா! இல்லை பொழுது போக்கு அம்சங்களும் இடம்பெறுமா என்பதை இன்னும் 04 நாட்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
https://www.facebook.com/udhayamtv/


-தொகுப்பு -
-பிரதீஸ்-

இதுபோன்ற தொலைக்காட்சி, வானொலி மற்றும் செய்மதி தொலைக்காட்சி சேவைகள் சம்பந்தமான செய்திகளை தமிழில் உடனுக்குடன் அறிந்துகொள்ள தொடர்ந்து எமது இணையதளத்துடனும், முகப்பு புத்தகம் வாயிலாக எமது பக்கத்தை Like செய்தும் இணைந்திருங்கள். 

Share this article :

+ comments + 1 comments

January 27, 2016 at 9:14 PM

nalla pathivu....

Post a Comment

 
Support : DTH News | DTH News 1st | DTH News 1st
Copyright © 2021. DTH News - All Rights Reserved
Template Created by Pratheeswaran Published by DTH News
Proudly powered by DTH News 1st