TV18 பிராட்காஸ்ட் கட்டுப்பாட்டில் இருக்கும் ஈடிவி நியூஸ் நெட்வொர்க் தேர்தல் நடைபெறும் மாநிலங்களாகிய தமிழ்நாடு, கேரளா மற்றும் அஸ்ஸாமில் மூன்று செய்தி சேனல்களை துவக்க திட்டமிட்டுள்ளது
சேனல்கள் ETV பிராண்ட் பெயரில் தொடங்காமல் News18 என்ற பெயரிலேயே தொடங்க உள்ளது.
சேனல் பெயர்கள் News18 தமிழ்நாடு, News18 கேரளா மற்றும் News18 அசாம் என்ற பெயரில் சேனல்களை துவக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
நெட்வொர்க் சேனல்களை நடத்துவதற்கு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. எனினும் ஏப்ரல் மாதத்தில் இந்த புதிய சேனல்களை துவக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன.
தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தில் போட்டியாளர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களா தமிழ்நாட்டில், சன் டிவி நெட்வொர்க் மற்றும் கேரளாவில் ஏசியாநெட் போன்றவர்களுடன் களத்திலும் காற்றிலும் போட்டியிட வேண்டியிருக்கும்.
மேலும் அரசியல் கட்சிகளை சார்புள்ள மற்றும் தினசரி நிறுவனங்களை சார்ந்த செய்தி சேனல்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டிலும் அதிக ஆதிக்கத்தில் உள்ளன. ஆனால் இந்த மாநிலங்களில் சேனல் தொழிலை மட்டுமே பின்னணியாக கொண்ட செய்தி சேனல்கள் மிகவும் குறைவு.. TV18 இதை நன்கு புரிந்துள்ளது என்றே கருதவேண்டியுள்ளது.
மேலும் பல மாநிலகளில் பல மொழிகளில் செய்தி சேனல்களை நடத்தி வருகிறபடியால்... கடுமையான போட்டிகளை சமாளிக்கும் கட்டமைப்பும் உள்ளதால்... ஏற்கனவே இருப்பவர்கள்தான் போட்டிகளை பற்றி சற்று கவலை யோசிக்க வேண்டியநிலை உருவாகியுள்ளது.
TV18தமிழ்நாடு சேனல் ஆரம்பத்தில் உள்கட்டமைப்பு உருவாக்குவதில் அதிக காலம் எடுக்கும் என்கிறபடியால்... ஆந்திரா தலைநகரான ஹைதெராபாத்த்தில் இருந்து ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
TV18தமிழ்நாடு சேனலுக்கு திரு.குணசேகரன் (புதியதலைமுறை) தலைமை ஏற்றுள்ளார் எனவும் மாவட்ட வாரியாக செய்தியாளர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Post a Comment