இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உட்பட 16 நகரங்களில் இந்த சேவையை கடந்த பிப்ரவரி மாதம் முதல் செல்பேசி வழி தொலைக்காட்சி சேவை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை பெற ஆண்டெனாவுடன் கூடிய டிவிபி-டி2 கருவியை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இணையவசதி தேவையில்லை என்றும், பயணத்தில் இருந்துக்கொண்டே தூர்தர்சனின் தொலைக்காட்சி சேவைகளை இலவசமாக காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை மூலம் முதற்கட்டமாக டிடி நேஷ்னல், டிடி நியூஸ், டிடி பாரதி, டிடி ஸ்போர்ட்ஸ், டிடி கிசான் ஆகிய தொலைக்காட்சிகளை மட்டுமே காண முடியும்.
விரைவில் மற்ற தொலைக்காட்சிகளையும் ஒளிபரப்புவதோடு, சிக்னல் பெறக்கூடிய பகுதிகளை விரிவுப்படுத்தவும் தூர்தர்சன் திட்டமிட்டுள்ளது.
இணைய வசதி மூலம் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனில் தொலைக்காட்சிகளை காணும் இச்சூழலில், இணையம் இன்றி, இலவசமாக தொலைக்காட்சி சேவைகளை எளிய தொழில்நுட்பங்கள் மூலம் வழங்க தூர்தர்ஷன் முயற்சி மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment