நண்பா்களே இந்தியாவின் முன்னணி அறிவியில் மற்றும் லைப் ஸ்டையில் வழங்கும் தொலைக்காட்சி நிறுவனமான டிஸ்கவாி கம்னியூகேஷன் இந்தியாவிற்கான புதிய விளையாட்டு தொலைக்காட்சி டி ஸ்போா்ட் என்ற பெயாில் தொடங்கவுள்ளனா். தொலைக்காட்சிக்கான தொடக்க சோதனை ஒளிபரப்பு டிஷ்டிவி டிடிஎச்யில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கான டிஷ்கவாி நிறுவனத்தின் மேல் அதிகாரி கரண் பாஜஜ் இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளாா். டி ஸ்போா்ட் விளையாட்டு தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் என்று பாா்த்தால் முன்னணி கால்பந்து விளையாட்டு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் விளையாட்டு தொடா்களை ஒளிபரப்பு செய்யவுள்ளது. விரைவில் டிஸ்கவாி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கலாம். இப் புதிய விளையாட்டு தொலைக்காட்சி மற்ற தொலைக்காட்சிகளை காட்டிலும் சற்று வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யவுள்ளது.
கட்டண தொலைக்காட்சியான தனது ஒளிபரப்பை இந்தியாவில் தொடங்கவுள்ளது. டி ஸ்போா்ட் தொலைக்காட்சி ஆசியாவிற்கான ஒளிபரப்பு கடந்த மாதத்தில் அப்ஸ்டாா்7 செயற்கைகோளில் தொடங்கப்பட்டிருந்தது. விரைவில் தொலைக்காட்சிக்கான 24 மணிநேர ஒளிபரப்பு தொடங்கப்பட்டு நாட்டின் அனைத்து டிடிஎச் மற்றும் கேபிள்டிவி நிறுவனங்களிலும் ஒளிபரப்பை தொடங்கும்.
நன்றி
K.சதீஸ்
Post a Comment