வணக்கம் நண்பர்களே நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி இன்று நாம் பார்க்க போவது இந்திய டிடிஹச் சேவையும் அதன் வளர்ச்சியும் என்ற தலைப்பில்.
இந்தியாவில் டிடிஹச்-யில் முதலில் கால் பதித்தது டிஷ் டிவி இந்த டிடிஹச் சேவை வருகைக்கு பிறகு இந்தியாவில் மொத்த டிடிஹச்களின் எண்ணிக்கை என்பது மிக குறைவு அதற்கு அடுத்த படியாக அரசாங்கம் சார்பில் DD DirectPlus என்ற டிடிஹச் சேவையை துவங்கி இந்தியாவில் மொழி வாரியாக அனைத்து இந்திய மொழி சேனல்களையும் இலவசமாக கொடுத்த வந்த நிலையில் இதனை தொடர்ந்து தனியார் டிடிஹச் சேவை அதிகம் வர துவங்கின .
அந்த வரிசையில் சன் டேரைக்ட், விடியோகான் டி2ஹச், டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி, ரிலையன்ஸ் பிக் டிவி என வர துவங்கியது. அந்த சமயத்தில் கிங் பிஸ்ஸர் ஓனர் ஆனா விஜய் மல்லையா கூட கிங் பிஸ்ஸர் டிடிஹச் துவங்க போவதாக அறிவிப்பு வந்தது அது பின்னர் அப்படியே கிடப்பில் போடபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ஆரம்பித்த டிஷ் டிவியின் மற்றொரு டிடிஹச் சேவையான ஜிங் என தற்பொழுது உள்ள இந்திய டிடிஹச் சேவைகளின் மொத்த எண்ணிக்கை 8 ஆகும். உலகிலேயே அதிகப்படியான டிடிஹச்-களை வைத்து சேவை வழங்கும் நாடுகளில் முதல் இடம் இந்தியாவே என்பது. யாரும் மறுக்க முடியாத ஒன்று.
இவ்வளவு டிடிஹச் சேவைகள் இருக்கும் பட்சத்தில் இவை அனைத்து டிடிஹச் களுக்கும் வெளிநாடு வாடிக்கையாளர்கள் அதிகம், ஒவ்வொரு டிடீஹச் களிற்கும் மில்லியன் கணக்கில் வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ரிலையன்ஸ் டிஜிட்டலின் மற்றொரு படைப்பான ஜியோ நிறுவனம் தனது ஐபி டிவி சேவையை துவங்கவுள்ளது இதணை நிறை பேர் டிடிஹச் சேவை என கூறி வருகின்றனர் . இது ஒரு டிடிஹச் சேவை கிடையாது இந்த சேவை ஆன்லைன் மூலம் ஸ்டிரிமிங் முறையில் பைர் லைன் மூலம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிடிஹச் சேவையில் வருமானம் இல்லை என்றால் ஏன் இவ்வளவு கம்பெனிகள் இந்தியாவில் வருகிறார்கள் என்பது யோசிக்கவேண்டிய விஷயம் ஆகும் . அந்த அளவிற்கு உலக அளவில் நம்மை சுற்றியுள்ள அண்டை நாடு முதல் அயல்நாடு வறை இந்திய டிடிஹச் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது . இந்த தகவல் பற்றிய கேள்வி அல்லது உங்கள் மாற்று கருத்துகளை கமாண்டில் தெரிவிக்கவும்.
-பாஸ்கரன்-
Post a Comment