பண்ணையபுரத்தில் பூத்த மெல்லிசை மொட்டு...
அன்னை சின்னத்தாய் மீது தந்த இன்னிசை பட்டு...
ஆண்டவனே இசையமைத்த ஏழைகளின் மெட்டு...
ஏழிசையும் பணிந்து நிற்கும் இவர் பாதம் தொட்டு...
அனுதினமும் நமை நனைக்கும் பாட்டு மழை...
கண்ணை மூடிநாம் வணங்கும் காற்றினிடை...
இவரின் பாடல்கள் சந்தோசத்தின்போது விருந்தாக மாறும்...
கவலையின்போது மருந்தாக மாறும்...
அன்னகிளியில் துறலாய் தொடங்கி...
அரை நூற்றாண்டு காலம் அடை மழையாய் பொழிந்தவர்...
இன்றும் இசைக்கடலாய் பரந்து நின்று நம்மை பரவசப்படுத்திக்கொண்டிருக்கிறார்...
இவர் ஆயிரம் படங்களை கரை கொண்டு சேர்த்த இசைத்தோள்...
ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை பிறக்கும் இசைஜானி...
அந்த ஒப்பற்ற மேதையின் தெய்வராகம் படைக்கும் ராகதேவன் ஆண்டவனை தொழுது ஆராதனை செய்வதில் பேருவகை கொள்வோம்..
Post a Comment