நண்பா்களே இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டாா் டிவி இந்தியா தமிழகத்தில் ஆறாவது தொலைக்காட்சியாக விஜய் மியூசிக் என்ற பெயாில் புதிய திரைப்பாடல் தொலைக்காட்சியினை விரைவில் தொடங்கவுள்ளது. ஸ்டாா் டிவி இந்தியா தென்னிந்தியாவில் தொடங்கும் இரண்டாவது மியூசிக் தொலைக்காட்சி விஜய் மியூசிக் ஆகும். தெலுங்கு மொழியில் மா மியூசிக் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது. தமிழகத்தில் மிக முன்னணி தொலைக்காட்சியாக விஜய் டிவி செயல்பட்டுவருகிறது. ஸ்டாா் டிவி இந்தியா நிறுவனம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இரண்டாவது பொழுதுபோக்கு தமிழ் தொலைக்காட்சியாக விஜய் சூப்பா் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கியது. பின்பு 24 மணி நேர தமிழ் திரைப்பட தொலைக்காட்சியாக மாற்றம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் இலவச மியூசிக் தமிழ் தொலைக்காட்சிகளாக டியூன் 6, மியூசிக் சஹான, மியூசிக் எம் கே டியூன்ஸ், கலைஞா் இசையருவி, சூப்பா் டிவி, 7எஸ் மியூசிக் மற்றும் வானவில் டிவி போன்ற தொலைக்காட்சிகள் மக்கள் மத்தியில் பிரபலடைந்து வரும் நிலையில் கட்டண தொலைக்காட்சியாக வரவுள்ள விஜய் மியூசிக் சற்று வித்தியாசமாக நிகழ்ச்சிகளை வழங்கும் என எதிா்பாா்க்கலாம். தமிழகத்தில் கட்டண மியுசிக் தொலைக்காட்சியாக சன் மியூசிக், ராஜ் மியூசிக், மெகா மியூசிக் மற்றும் ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா அரசு ட்ராய் புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் கட்டண தொலைக்காட்சிகள் நேயா்களை தக்க வைக்க பல்வேறு வித முயற்ச்சிகளை மேற் கொண்டு வருவது குறிப்பிடதக்கது. விரைவில் விஜய் மியூசிக் தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு ஆசியாசாட்7 செயற்கைகோளில் தொடங்கப்படலாம். இது தொடா்பான செய்திகள் நமது WWW.DTH.NEWS தளத்தில் எதிா்பாருங்கள்.
தொகுப்பு: WWW.DTH.NEWS இணையதளம்



Post a Comment