Home » , » டிஷ் டிவியில் இனிமேல் இந்த சேனல் FREE.. ஆனால்!

டிஷ் டிவியில் இனிமேல் இந்த சேனல் FREE.. ஆனால்!

Written By DTH News on 19 April 2020 | 2:20 PM

டிஷ் டிவி இப்போது இந்திய ரூபா.60 மதிப்புள்ள மற்றொரு கட்டண சேவை சனலை இலவசமாக வழங்குகிறது.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பீதி காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள லொக்டவுன் நாட்களின் போது ஏற்கனவே நான்கு சேர்விஸ் சனல்களை இலவசமாகக் வழங்கிய டிஷ் டிவி, இப்போது மேலும் கட்டணமில்லாமல் மற்றொரு கட்டண சேர்விஸ் சனலை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இருப்பினும், இந்த இலவச சலுகையானது அனைவருக்கும் கிடைக்காது. குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது நீண்ட கால ரீசார்ஜ் செய்யும் தற்போதைய டிஷ் டிவி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்திய ரூபா.60 மதிப்புள்ள இந்த இலவச 'சினி ஆக்டிவ்' சேனல் கிடைக்கும்.

டாடா ஸ்கை நிறுவனத்தை போலவே, டிஷ் டிவியும் அதன் வாடிக்கையாளர்களுக்கு 12 மாதங்கள் அல்லது ஒரு வருடம் முன்பதிவு செய்தால் 30 நாட்கள் வரை இலவச சேவையை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிஷ் டிவி வாடிக்கையாளர்கள் மூன்று மாதங்கள் ரீசார்ஜ் செய்வதின் மூலம் ஏழு நாட்கள் கூடுதல் சேவையையும், ஆறு மாதங்கள் ரீசார்ஜ் செய்வதின் மூலம் 15 நாட்கள் கூடுதல் சேவையையும், 12 மாதங்கள் அல்லது 1 வருடம் ரீசார்ஜ் செய்வதின் மூலம் 30 நாட்கள் இலவச சேவையையும் பெறலாம்.


இந்த இலவச சேவையைப் பெற, அனைத்து வாடிக்கையாளர்களும் செய்ய வேண்டியது தற்போதைய மாதாந்த கட்டண  தொகையை இன்னும் நீண்ட காலத்திற்கு ரீசார்ஜ் செய்வதுதான். உதாரணமாக, உங்கள் டிஷ் டிவியின் மாதாந்த கட்டண தொகை இந்திய ரூபா.250 எனில், கூடுதல் 30 நாட்கள் சேவையை இலவசமாகப் பெற நீங்கள் இந்திய ரூபா.3,000 முன்பணத்துடன் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

மேலும், இந்திய நாட்டின் இரண்டாவது பெரிய டி.டி.எச் நிறுவனமான டிஷ் டிவி அதன் நீண்ட கால ரீசார்ஜ் சலுகைகளில் சிறிய மாற்றங்களையும் செய்துள்ளது. நீண்டகால ரீசார்ஜ் சலுகையானது New Tariff Package இன்  கீழ் மட்டுமே கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. எனவே நீங்கள் ஏற்கனவே ஒரு சனல் பக்கேஜில் சலுகையைப் பெற்றுக்கொண்டு இருந்தால், நீண்ட கால ரீசார்ஜ் சலுகையையும் சேர்த்து மொத்தம் இரண்டு சலுகைகளை பெற நீங்கள் பக்கேஜை மாற்ற வேண்டும். இது தான் தற்போது டிஷ் டிவி கொண்டு வந்துள்ள புதிய மாற்றம் ஆகும்.

இந்த தகவல்கள் டிஷ் டிவி இன் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து தொகுக்கப்பட்டவை.
Share this article :

Post a Comment

 
Support : DTH News | DTH News 1st | DTH News 1st
Copyright © 2021. DTH News - All Rights Reserved
Template Created by Pratheeswaran Published by DTH News
Proudly powered by DTH News 1st