எந்தவொரு வணிக நோக்கமும் இல்லாமல் கடந்த 15 வருடங்களாக வாசகர்களுக்கு நாம் DTH தகவல்களை வழங்கி வருகின்றோம். குறித்த காலத்தில் வாசகர்கள் சினிமா தகவல் மற்றும் வதந்திகளுக்கு வழங்கிய முக்கியத்துவத்தை இதுபோன்ற தொழில்நுட்பம் சர்ந்த செய்திகளுக்கு வழங்கவில்லை என்பது உண்மை. எனவே இனிமேலாவது எமது தகவல்களை வாசிப்பதுடன் நின்றுவிடாமல் அதிகம் எமது தகவல்களை சமூகவலைத்தலங்களில் பகிருங்கள் (Sharre) மற்றும் (Like) பண்ணுங்கள்.
இந்திய தொலைக்காட்சி அலைவரிசைகளை Broadcast Audience Research council India ஒவ்வொரு வாரமும் பார்வையாளர்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப தொலைக்காட்சி அலைவரிசைகளை தரப்படுத்தும். அந்த வகையில் சன் டிவி தான் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும். அதுவும் இந்திய அளவிலேயே முதல் இடத்தில் இருக்கும்.
இந்திய தொலைக்காட்சி அலைவரிசைகளை Broadcast Audience Research council India ஒவ்வொரு வாரமும் பார்வையாளர்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப தொலைக்காட்சி அலைவரிசைகளை தரப்படுத்தும். அந்த வகையில் சன் டிவி தான் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும். அதுவும் இந்திய அளவிலேயே முதல் இடத்தில் இருக்கும்.
ஆனால் சன் தொலைக்காட்சி கடந்த வாரம் இந்தியளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த விடயம் சன் தொலைக்காட்சி ரசிகர்களிடையில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபுறமிருக்க முதலிடத்தில் இருப்பது டிடி நேஷ்னல், என்பதுதான் பலருக்கும் ஆச்சரியம். ஆம், கேபிள் டிவி வந்த பிறகு டிடி நேஷ்னல் தொலைக்காட்சியை யாரும் பெரிதாக விரும்பி பார்ப்பது இல்லை.
ஆனால், இந்த முறை டிடி நேஷ்னல் தொலைக்காட்சி முதலிடத்திற்கு வந்துள்ளமைக்கான காரணத்தை நான் ஆராய்ந்து பார்த்தேன், அதற்கு காரணம் டிடிநேஷ்னல் தொலைக்காட்சியில் ஒருகாலத்தில் மிக பிரபல்யமாய் ஒளிபரப்பாகிய சக்திமான் தொலைக்காட்சிதொடரை மறு ஒளிப்பரப்பு செய்து வருகின்றனர்.
Broadcast Audience Research council India வினால் தரப்படுத்தப்பட்ட அட்டவணை உங்கள் பார்வைக்காக் கீழுள்ளது மேலும் இந்த Link ஐ அழுத்துவதன் மூலம் ஒவ்வொருவாரமும் இந்திய தொலைக்காட்சி அலைவரிசைகளின் தரப்படுத்தல்களை நீங்களே அறிந்துகொள்ளலாம்.
-தொகுப்பு-
-பிரதீஸ்-
Week 13: Saturday, 28th March 2020 to Friday, 3rd April 2020
Rank | Channel Name | Weekly Impressions (000s) sum | ||
---|---|---|---|---|
Week 13 | ||||
1 | DD National | 1596923 | ||
2 | Sun TV | 1306360 | ||
3 | Dangal | 1151414 | ||
4 | SONY SAB | 892566 | ||
5 | Sony MAX | 803023 | ||
6 | Big Magic | 750781 | ||
7 | Zee Cinema | 682751 | ||
8 | STAR Gold | 642375 | ||
9 | NICK | 602369 | ||
10 | ETV Telugu | 582758 | ||
TOP 10 Channels *Across Genre : All India (U+R) : 2+ Individuals, To get this data on your Twitter timeline, tweet with #BarcTweet Top 10 Channels |
Post a Comment