இந்த தகவல்கள் அனைத்தும் கீழ் குறிப்பிடப்படும் சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் மற்றும் நிறுவனங்களின் உத்தியோகபூர்வ ட்விட்டர்தளத்தில் இருந்து சேகரித்து தொகுக்கப்பட்டவை .
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசுக்கு உதவும் விதமாக பல்வேறு சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் உதவி தொகை அளித்து வருகின்றனர்.
நடிகர்களில் அக்ஷய் குமார் அதிகபட்சமாக 25 கோடி ரூபாயை தருவதாக அறிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் தல அஜித் 1.25 கோடி ருபாய் கொரோனா நிவாரண நிதியாக அளித்தார். அதில் 50 லட்சம் ருபாய் தமிழக அரசுக்கும், 50 லட்சம் ருபாய் மத்திய அரசுக்கும் கொடுத்தார்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சன் டிவி குழுமம் 10 கோடி ரூபாயை கொடுப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் முன்னணியில் இருக்கும் தொலைக்காட்சி மற்றும் சினிமா தயாரிப்பு நிறுவனம் இந்த தொகையை அளித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Sun TV Group is donating Rs.10 Crores towards Corona Covid 19 relief measures.— Sun TV (@SunTV) April 9, 2020
சன் டி.வி. குழுமம் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு ரூ. 10 கோடி வழங்குகிறது.#COVID19 #CoronaUpdate
சன் பிக்சர்ஸ் தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தினை தயாரித்து வருகிறது. அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினையும் சன் பிக்சார்ஸ் தான் தயாரிக்கிறது. அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் கொரோனா ஊரடங்கு காரணமாக முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமின்றி விஜய்யின் பிகில் படத்தினை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் 50 லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment