மலையாள சினிமா உலகம் மிக எளிமையானது. பிரமாண்டத்தைவிட இயல்பை மட்டும் விரும்புபவர்கள் மலையாளிகள். அப்படி ஒரு எளிமையான மலையாள திரையுலகிலிருந்து கடந்த வருடம் வெளியான "ஜிமிக்கிகம்மல்" பாடல் ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்தது. அதன் பின்னர் ஒரு கிராமிய பாடல் மலையாள ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.
இந்த பாடலை பாடியவர் கேரளா எல்லையில் உள்ள தமிழக எல்லையான அட்டப்பாடியில் வசிக்கும் நஞ்சம்மா என்கிற பெண்மணி நஞ்சம்மா இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.
சசி இயக்கத்தில் ப்பிரித்திவிராஜ் விஜிமேனன் நடித்த "ஐயப்பனும் கோஷியும்" என்ற படத்தில் நஞ்சம்மா பாடிய "கலக்காத்த சந்தன மரம் வெகுவாக பூத்திருக்கு அத தினம் பறிச்சுக்கிட்டு" என்ற பாடல் இன்று கேரளாவில் பட்டி தொட்டி எங்கும் எதிரொலிக்கிறது. மலையாள சினிமாவும் ஊடகங்களும் நஞ்சம்மாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது.
ஒரு கிராமிய பாடல் இந்த அளவிற்கு மலையாள திரையுலகை ஆக்கிரமித்தது இதுதான் முதன் முறை. ஆனால் பாடலை பாடிய நஞ்சம்மா அட்டப்பாடியில் ஒரு எளிமையான வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். தான் பெற்ற குழந்தைகாளால் கைவிடப்பட்ட நிலையில் தானாக ஆடு மேய்த்து அதில் இருந்து வரும் வருமானத்தில் பிழைப்பு நடத்திவருகிறார். இன்று மலையாள திரை நட்சத்திரங்கள் பலரையும் சந்தித்துவிட்டார்.
அந்த பாட்டில் கூட தனது வாழ்க்கையை பற்றித்தான் இருளர் மொழியில் பாடினேன் என வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் சினிமாவில் பாடுவது இதுதான் முதன் முறை என்றும், தான் படிய பாடல் மூலம் இவ்வளவு புகழ் கிடைத்தாலும் பணம் சொத்து வீடு வாசல் ஆகியவற்றில் தமக்கு பெரும் நாட்டம் இல்லை என்று கூறும் அவர், இப்படி எல்லாம் ஒரு பாடல் அதுவும் இருளர் மொழியில் இருக்கிறது என்பதனையும், அதில் ஒளிந்திருக்கும் சோகங்களையும் இன்றைய தலைமுறையினர் புரிந்துகொண்டாலே தனக்கு போதும் என்று அவரது வெகுளித்தனமான சாயலில் கூறுகிறார்.
-எழுத்துரு-
-பிரதீஸ்-
+ comments + 1 comments
Good job
Post a Comment