புதிய சார்வரி வருடம் நிகழும் மங்களகரமான விகாரி வருடம் பங்குனித்திங்கள் 31ம் நாளில் (2020.04.13) திங்கட்கிழமை முன்னிரவு 07.26 நிமிடமளவில் மலர்கின்றது .
13.04.2020 திங்கட்கிழமை பி.ப 03.26 மணிமுதல் இரவு 11.26மணி வரை மருத்துநீர் வைக்கும் விஷ புண்ணியகாலம், இக்காலத்தில் தலையில் இலவமிலையும் காலில் விளா இலையும் தரித்து புனிதமாக தயாரிக்கப்பட்ட மருத்து நீரை தோய்த்து நீராடி வெண்மையான பட்டாடை உடுத்தி இறைவழிபாடுகளில் ஈடுபடலாம்.
உப்புசுவை கலந்த தயிர்சோறு உணவாக எடுத்துக்கொள்வது உகந்தது.
நாட்டின் தற்கால நிலையறிந்து சட்டதிட்டங்களை மதித்து பிறக்கும் புதிய வருடத்தை எம் மக்கள் வரவேற்கவும் தயாராகவேண்டும் , விரைவாக நாடு இயல்புநிலைக்கு திரும்பவும், மக்கள் யாவரும் நல் ஆரோக்கியத்துடன் வாழ பிறக்கும் புதுவருடத்தில் அனைவருக்கும் இறைஆசி கிட்ட வேண்டும்.
-நன்றி-
Kiskanthamuthaly




Post a Comment