நண்பர்கள் பலரின் வேண்டுகோளுக்கிணங்க பல் மொழி தொலைக்கட்சி (Multy Audio Feed Television) சேவைகள் பற்றியே இந்த தொகுப்பில் மிக வரிவாக் பார்க்க இருக்கிறோம். அது என்ன பல் மொழி தொலைக்கட்சி என்று சிந்திப்பது புரிகிறது. இந்த பல் மொழி தொலைக்கட்சி பற்றி இந்தியாவில் உள்ளவர்கள் நன்கு அறிந்திருப்பர். இலங்கையர்களுக்கு இது தொடர்பான அனுபவம் சற்று குறைவாகவே இருக்கும்.
தொலைக்காட்சி ஒளிபரப்பு தொழிநுட்பத்தில் இலங்கையர் நாம் மிகவும் பின் தங்கியே உள்ளோம் என்பது உண்மை. பிற நாடுகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை டிஜிட்டல், HD, 4K HD என இமையம் தொடும் சமயம் நாம் இன்னமும் பழைய Analog தொழில்நுட்பம் மூலமே தொலைக்காட்சி சேவைகளை காண்கிறோம். இருந்தும் ஒரு ஆறுதல் Dilaog TV, SLT PEO TV முலமாக சற்று ஒருபடி மேலே போய் ஓரளவுக்கு தெளிவாக இலங்கை தொலைக்காட்சிகளை பார்க்ககூடியதாக உள்ளது. அதுவும் Dilaog TV, SLT PEO TV போன்ற தொலைக்காட்சி சேவை வழங்குனர்கள் Analog மூலமான எமது தொலைக்காட்சி சேவையை பெற்று அவர்கள் டிஜிட்டல் தொழிநுட்பத்திற்கு மாற்றி ஒளிபரப்பு செய்கின்றனர். என் கணிப்பின் படி சாதாரண HD தொழிநுட்பத்தில்கூட இலங்கை தொலைக்காட்சி சேவை ஒன்றை பார்த்து மகிழ ஒரு சகாப்பதம் போகலாம். இது ஒரு நீண்ட மீள் செயலாக்கம் அதிக பணசெலவு என்பதால் இவற்றை இப்போதைக்கு எமது தொலைக்காட்சி அலைவரிசைகள் கற்பனை கூட செய்து பார்க்கமாடார்கள். இவ்வறான ஒரு நிலையில் பல் மொழி தொலைக்கட்சி (Multy Audio Feed Television) பற்றி இலங்கையர் நாம் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சரி பல் மொழி தொலைக்கட்சி (Multy Audio Feed Television) என்றல் என்ன, ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பை செய்கின்ற போது அந்த நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் பல மொழிகளை பார்க்ககூடிய வகையில் ஒளிரப்பு செய்கின்றமையே பல் மொழி தொலைக்கட்சி சேவை ஆகும் (Multy Audio Feed Television). தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பகிகொண்டிருக்கும் சமயமே அதை நாம் Remote மூலம் அந்த நிகழ்ச்சியின் Audio வை வேண்டிய மொழிகளை மாற்றி பார்க்கலாம்.
இந்தியாவில் இவ்வாறான தொலைக்கட்சி அலைவரிசைகள் நிறையவே உள்ளன. அவற்றி சிலவற்றை இத் தொகுப்பின் கீழ் வழங்குகின்றோம். அத்துடன் எம்மால் பதிவுசெய்த FOX Life தொலைக்காட்சி தமிழ் ஒளிபரப்பின் You Tube ஒளித்தொகுப்பினையும் கீழே வழங்குகின்றோம். மேலும் இலங்கையில் SLT PEO TV பல் மொழி தொலைக்கட்சி தொழில்நுட்பத்தில் நான்கு அலைவரிசைகளை 10.11.2020 இல் இருந்து ஒளிபரப்பு செயன்கின்றன. இதில் இலங்கை தமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இந்த நான்கு தொலைக்காட்சி அலைவரிசைகளும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் கிடைகின்றமை. PEO TV அலைவரிசை விபரங்கள் கீழே கொடுக்கபட்டுள்ளது.
▶️48-Animal Planet (English, Tamil)
▶️66-POGO (English, Tamil)
▶️64-Discovery Kids (English, Tamil)
▶️60-Nickelodeon (English, Tamil)
இந்த நான்கு தொலைக்காட்சிகளையும் தமிழில் காண கீழ்க்கண்ட படிமுறையை உங்கள் PEO TV Remote மூலம் செய்யவும்.
Select Audio: Select Channel > Press OK > Press the Down Arrow Key > Select Tamil > Press OK
மேலும் PEO TV இலங்கை பாராளுமன்ற அமர்வையும் அலைவரிசை இலக்கம் ▶️91 இல் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பார்த்து மகிழலாம். மேலும் இது போன்ற தொலைக்காட்சி அலைவரிசைகள் Dilag TV இல் கிடைக்குமா என்று கேட்டால் இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்பதே எனது பதில். மேலும் Dialog TV வாடிக்கயளர்கள் Dialog TV சேவை முகவர்களிடம், PEO TV இல் இவ்வாறான சேவை கிடைக்கிறது என்று தொடர்ச்சியாக அதிகம் அதிகமாக கோரிக்கை விடுவதன் மூலமே எதிர்காலத்தில் சில சமயம் இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
எமது இந்த தொகுப்பை வாசிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் அதிகம் அதிகம் பகிர்ந்து உங்கள் ஆதரவை எமக்கு தாருங்கள்.
Post a Comment