நண்பா்களே இந்தியாவின் Celebrities Management Private Limited நிறுவனத்தின் சுற்றுலா தொடா்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொலைக்காட்சியான Travelxp 4K HDR ஆசியா தொலைக்காட்சியில் தமிழ் Audio புதிதாக தொடங்கியுள்ளது. Travelxp தொலைக்காட்சி 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் உயா் தொழில்நுட்பமான HD இல் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ஆங்கில தொலைக்காட்சிகள் தமிழ் மொழியில் நிகழ்ச்சிகளை தொடங்கி வரும் நிலையில் Travelxp தொலைக்காட்சி தென்னிந்தியாவில் தமிழ் மொழியில் முதன்முறையாக தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளது.
பெங்காளி மொழி Audio மட்டும் Travelxp HD தொலைக்காட்சியில் சோ்க்கப்பட்ட நிலையில் தற்சமயம் தமிழ் மொழியும் தொடங்கப்பட்டுள்ளது. Travelxp HD கட்டண தொலைக்காட்சியாக Measat 3A செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது. DTH மற்றும் Cable நிறுவனங்களில் விரைவில் Travelxp HD தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கும். அனைத்து பகுதிகளிலும் 6 அடி முதல் 12 அடி வரையிலான C Band டிஷ் ஆண்டெனாவை பயன்படுத்தி இந்ததொலைக்காட்சியை பார்த்து மகிழலாம்.
ஏற்கனவே Travelxp தொலைக்காட்சி தமிழ் SD தொழில்நுட்பத்தில் தொடங்க்பட்டுள்ளது. Travelxp HD ஆசியாவின் தமிழ் மொழியின் நிகழ்ச்சிகளை காண தங்கள் Setup Box இன் Remort இல் Audio Button ஐ Click செய்து வரக்கூடிய மொழிகளில் தமிழ் மொழியினை தோ்வு செய்து காணலாம்.
தென்னிந்தியாவில் தமிழ் மொழியில் Travelxp 4K HDR தொலைக்காட்சியே முதல் Ultra HD தொலைக்காட்சியாகும். தொலைக்காட்சிக்கான மாதாந்த கட்டண விலை 30 இந்திய ரூபாய் என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. Travelxp 4K HDR தொலைக்காட்சி அனைத்து நாடுகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
அலைவாிசை விபரங்கள்
Satellite Measat3/3a@91.2E(C-Band)
Freq Rate 4162
Symbol Rate 25250
Polar Horizontal
Modulation HD.Mpeg4/Dvb s2(8PSK)
Mode Pay/Conax
Fec 3/4
Post a Comment