Home » » ''தாவி வந்த பந்தை எகிறி அடித்தார் சங்கா''.. இனி தமிழிலிலும் கேட்கலாம் உலக கோப்பை கிரிக்கெட் வர்ணனை

''தாவி வந்த பந்தை எகிறி அடித்தார் சங்கா''.. இனி தமிழிலிலும் கேட்கலாம் உலக கோப்பை கிரிக்கெட் வர்ணனை

Written By Unknown on 28 January 2015 | 8:26 PM

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் வர்ணனையை தமிழிலும் கேட்டு ரசிக்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனைகளை, இந்திய கிரிக்கெட் தொலைக்காட்சி சேனல்கள் ஆங்கிலத்தில் மட்டும் ஒலிபரப்பி வந்த நிலையில், கடந்த சில வருடங்களாக ஹிந்தியிலும் ஒலிபரப்பப்பட்டுவருகிறது. குறிப்பாக ஸ்டார் சேனல் ஹிந்தியில் கிரிக்கெட் ஒலிபரப்பில் பெயர் வாங்கியுள்ளது. இந்நிலையில், தமிழ் உள்ளிட்ட ஆறு மொழிகளில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வர்ணனைகளை ஒலிபரப்ப ஸ்டார் ஸ்போர்ட்ஸ் முன்வந்துள்ளது.

தமிழ், கன்னடம்.....
தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காளி மற்றும் ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் கிரிக்கெட் வர்ணனைகளை ஒலிபரப்ப உள்ளது. ஆனால் தெலுங்கு ஒலிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை.

எப்படி கேட்பது? 
செட்-ஆப் பாக்ஸ், டிடிஹெச் போன்றவற்றில், இப்போது பல சேனல்களுக்கு மொழிமாற்றுவதற்கான வாய்ப்பு தரப்பட்டுள்ளது. டிஸ்கவரி சேனல், குழந்தைகளுக்கான கார்ட்டூன் சேனல்கள் போன்றவற்றில் இதுபோன்ற ஆப்ஷன்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். அதேபோல ஸ்டார் டிவியும் ஆப்ஷன்களை தந்து விரும்பிய மொழியை தேர்ந்தெடுக்கும் வசதியை ரசிகர்களுக்கு தர உள்ளது.

வானொலி வர்ணனை பொற்காலம் 
முன்பெல்லாம், இலங்கையில் கிரிக்கெட் நடைபெறும் காலங்களில் இலங்கை தேசிய வானொலியில் தமிழில் வர்ணனை ஒலிபரப்பாகும்,. தூய தமிழில் வர்ணனையாளர்கள் கிரிக்கெட்டை வர்ணிப்பார்கள். பவுன்சர் பந்துகளை, எகிறி பந்துகள் என்பர், ஓ.பி பந்துகளை, அளவு குறைந்த பந்து என்பர். கேட்கவே சுவாரசியமாக இருக்கும்.

மீண்டு(ம்) வருகிறது தமிழ் 
டிவிகள் கிராமங்களிலும் ஊடுருவிய பிறகு ரேடியோ வர்ணனைகள் மதிப்பிழந்தன. ஆனால் இப்போது டிவியிலேயே ரேடியோ வர்ணனையையும் கேட்கும் வசதி கிடைக்கப்போகிறது. என்ன கொண்டாட்டத்துக்கு ரெடியா?

star sports tamil

Share this article :

Post a Comment

 
Support : DTH News | DTH News 1st | DTH News 1st
Copyright © 2021. DTH News - All Rights Reserved
Template Created by Pratheeswaran Published by DTH News
Proudly powered by DTH News 1st