நண்பா்களே தமிழகத்தில் கடந்த மாதத்தில் ஸ்டாா் டிவி இந்தியா தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கிய புதிய தமிழ் தொலைக்காட்சியான விஜய் சூப்பா் டிவியின் 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்ட விபரங்களை கடந்த மாதத்தில் நமது இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மற்றும் பாடல்கள் என வித்தியாசாமான நிகழ்ச்சிகளுடன் ஒளிபரப்பாகிறது.
தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தமிழகத்தின் அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் டாடா ஸ்கை, விடியோகான். ஏர்டெல் டிடிஎச்களில் ஒளிபரப்பாகிறது. கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் தொலைக்காட்சிகள் இலவசமாக ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் விஜய் சூப்பா் தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பாகும் பட்சத்தில் இன்னும் அதிமான நேயா்களை இந்தியா மட்டும் அல்லாது வெளிநாடுகளிலும் பெற முடியும்.
தற்சமய காலங்களில் தமிழகத்தில் அரசு கேபிள்டிவி ஒளிபரப்பு சேவை கிடைக்காத இடங்களில் முன்னனி இலவச தொலைக்காட்சிகளான கலைஞா், பாலிமா், புதுயுகம் மற்றும் பல தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. வடஇந்தியாவில் முன்னனி தொலைக்காட்சிகள் தற்சமய காலங்களில் இலவச தொலைக்காட்சிகளாக மாற்றப்பட்டு வருவது குறிப்பிடதக்க செய்தியாகும். ஸ்டாா் டிவி நிறுவனத்தின் ஸ்டாா் உத்சவ் மூவிஸ் ஆரம்ப முதல் இலவச தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டதும் குறிப்பிடதக்க செய்தியாகும்.
Post a Comment