இந்தியாவில் இருந்து ஒளிபரப்பு செய்யப்படும் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், பாகிஸ்தான் தடைசெய்துள்ளது.
இதை சட்டரீதியில் அமுல்படுத்தும் நடவடிக்கையானது நேற்று முதல் பாகிஸ்தானில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மீறி செயற்படும் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனங்களை மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாகிஸ்தானின் தொலைத்தொடர்புகள் மற்றும் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்திய திரைப்படங்கள் மற்றும் இந்திய நிகழ்ச்சிகள் பாகிஸ்தானில் ஒளிபரப்பு செய்யப்படுகிறதா? என்பது தொடர்பில் செய்மதியின் உதவியுடன் தேடுதல்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தொலைத்தொடர்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பாகிஸ்தானிற்குள் இந்திய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளுக்கு பலத்த வரவேற்பு காணப்படுகின்றது.
-நன்றி -
-Hiru News-
Post a Comment