விஜய் தொலைக்காட்சி சேனலின் செல்லப் பிள்ளையான டிடி பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில்
கலந்து கொள்வாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதம் துவங்கும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ்
பிரச்சனையால் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கைவிடப்படுபவதாக தகவல் வெளியானது. ஆனால் பிக்
பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசன் திட்டமிட்டபடி நடிக்கும் என்று நிகழ்ச்சி
ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் வழக்கமாக துவங்கும் ஜூன்
மாதத்திற்கு பதில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் நிகழ்ச்சி துவங்குமாம்.
முந்தைய 3 சீசன்களை போன்றே இந்த சீசனையும் கமல் ஹாஸன் தான் தொகுத்து
வழங்கவிருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சண்டை சச்சரவுகள், காதல்
காட்சிகளை பார்க்க ஒரு கூட்டம் உள்ளது என்றால், அந்த நிகழ்ச்சியில் கமல் பேசும்
அரசியலை கேட்ட ஒரு கூட்டம் இருக்கிறது.
ட்விட்டரிலேயே மத்திய, மாநில அரசுகளை போடு போடுன்னு போட்டு விளாசும் கமல் இந்த
சீசனில் பிக் பாஸ் மேடையில் என்னவெல்லாம் பேசப் போகிறாரோ என்பதை பார்க்க பலரும்
ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கண்டிப்பாக பால்கனி அரசு பற்றி பேசுவார் என்று
எதிர்பார்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் 4 நிகழ்ச்சி நடக்கிறது என்பது உறுதியாகிவிட்டது, தொகுத்து வழங்குபவரும்
தெரிந்துவிட்டது. ஆனால் முக்கியமானவர்களான போட்டியாளர்கள் தான் யார், யார் என்று
இதுவரை தெரியவில்லை. போட்டியாளர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது. ஆனால்
சத்தமில்லாமல் அந்த வேலையை பார்த்து வருகிறார்களாம்.
ட்விட்டரில் கவர்ச்சியை காட்டி மிரட்டும் கிரண் ரத்தோட், டிவி நிகழ்ச்சி
தொகுப்பாளினி மணிமேகலை உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகிறது. இந்நிலையில் தான்
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி என்கிற டிடியை பிக் பாஸ்
வீட்டில் பார்க்க ஆசைப்படுகிறார்கள் ரசிகர்கள்.
ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸுக்கு ஒரு செல்லக்குட்டி இருப்பார். இந்நிலையில்
நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சேனலின் செல்லக்குட்டியான டிடி அக்கா பிக் பாஸின்
செல்லக்குட்டி ஆவதை பார்க்க ஆசையாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
ரசிகர்கள் டிடியை பிக் பாஸ் வீட்டில் பார்க்கத் துடிக்க முக்கிய காரணம் உள்ளது.
டிடி நன்றாக பேசுவார். அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தால் ஜாலியாக பொழுது போகும்.
மேலும் யாராவது வாலாட்டினால் டிடி விஸ்வரூபம் எடுத்து அவர்களை அடக்குவார்.
நாங்களும் எத்தனை நாள் தான் டிடி அக்காவை சிரித்தபடியே பார்ப்பது. பிக் பாஸ்
வீட்டிற்கு வந்தால் தானே அவரின் வேறு முகத்தையும் பார்க்க முடியும். அந்த முகத்தை
பார்க்கத் தான் ஏங்குகிறோம் என்கிறார்கள் ரசிகர்கள்.
ஓட்டு விஷயத்தில் எல்லாம் டிடிக்கு பிரச்சனையே வராது. அவருக்கு இருக்கும்
ரசிகர்கள் ஓட்டு போட்டாலே ஜெயித்து விடுவார். பிக் பாஸ் போட்டி தொடர்பாக முன்பே
டிடியின் பெயர் அடிபட்டது. ஆனால் 3 சீசன்களிலும் அவரை பார்க்க முடியவில்லை.
இந்நிலையில் தான் 4வது சீசனிலாவது டிடி அக்காவை பிக் பாஸ் வீட்டில் பார்த்துவிடத்
துடிக்கிறார்கள் ரசிகர்கள்.
இதற்கிடையே காலில் அடிபட்டு கட்டு போட்டு வீட்டில் இருக்கும் டிடி விரைவில்
குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
Post a Comment