வாடிக்கையாளர்களை மீண்டும் பெறுவதற்கான ஒரு நடவடிக்கையாக, டாடா ஸ்கை நிறுவனம்
கிட்டத்தட்ட 70 லட்சம் (அதாவது 7 மில்லியன்)
வாடிக்கையாளர்களுக்கான மாதாந்த கட்டணங்களை குறைக்க வேண்டி
உள்ளதால் அதன் சேவையில் இருந்து சில சனல்களை நீக்க முடிவு செய்துள்ளது.
ஏனென்றால், இந்தியாவின் மிகவும் பிரபலமான டி.டி.எச் ஒப்ரேட்டர் ஆன டாடா ஸ்கை
கடந்த 60 நாட்களில் அதிக விலை காரணமாக 15 லட்சம் (அதாவது 1.5 மில்லியன்)
வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
இந்த வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் ரூ.400 க்கும் குறைவான மாதாந்த வில்லிங்
கொண்ட வாடிக்கையாளர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் சந்தாக்களை அப்டேட்
செய்ய தவறிவிட்டனர் அல்லது தங்கள் சந்தாவை புதுப்பிக்க விரும்பாமல் சேவையை
கைவிட்டு விட்டனர்.
எக்கொணமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, கடந்த மே மாதத்தில் டாடா ஸ்கை
இணையத்தளத்தில் அல்லது அவர்களின் அப்பில் லொக் இன் " உள்நுழைந்த" 5
மில்லியன் வாடிக்கையாளர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் தங்கள் மாதாந்த
கட்டணங்களைக் குறைப்பதற்காக சேனல்களை கைவிட விரும்பியதாக நிறுவனத்தின்
பகுப்பாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.
மார்ச் மாதத்தில் இந்தியாவில் லொக்டவுன் செயல்படுத்தப்பட்டவுடன், ஒரு மில்லியன்
செயலற்ற வாடிக்கையாளர்கள் எங்கள் இணையத்தளத்திற்கு திரும்பி வந்தனர்.
இருப்பினும் ஏப்ரல் மாதத்தில் 1 மில்லியன் வாடிக்கையாளர்கள் மீண்டும்
வெளியேறினர். மே மாதத்தில் இன்னும் அரை மில்லியன்
வாடிக்கையாளர்கள் ரீச்சார்ஜ் செய்யவில்லை, என்று டாடா ஸ்கை நிர்வாக
இயக்குனர் ஹரித் நாக்பால் கூறி உள்ளார்.
"எந்த வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படக்கூடியவர்கள், மற்றும் பணம் செலுத்த
கடினப்படுபவர்கள் என்று எங்களின் பகுப்பாய்வு
காட்டுகிறதோ அவ் வாடிக்கையாளர்களை முழுவதுமாக இழப்பதை விட, சில
பக்கேச்ளையும் சனல்களையும் கைவிட்டு அவர்களின் மாதாந்த கட்டணங்களை குறைக்க முடிவு
செய்துள்ளோம்” என்று நாக்பால் விளக்கம் அளித்துள்ளார்.
"எனவே முதன்முறையாக எங்களின் பகுப்பாய்வுகளின்
அடிப்படையில், பாக்கேச்களை விற்பனை செய்வதற்கு பதிலாக தரம்
குறைப்பதற்கு முடிவுசெய்துள்ளோம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது, மாதாந்த வில்களைக் குறைக்கும் முயற்சியின் கீழ், டாடா ஸ்கை தனது 18
மில்லியன் சந்தாதாரர்களில் குறிப்பிட்ட 6 - 7 மில்லியன்
வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டுள்ளது. இந்த வாடிக்கையாளர்கள் மாதந்தோறும்
ரூ.350 அல்லது அதற்கு குறைவான வி ல்லிங் பெற்றவர்கள்.
தற்போது டாடா ஸ்கை எடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இவர்களுக்கு மாதம் ரூ.60
- ரூ.100 வரை மிச்சமாகும்.
நீக்கப்படும் குறிப்பிட்ட சனல்களானது தங்கள் பக்கேச்சில் இருக்க வேண்டும்
என்று விரும்பும் வாடிக்கையாளர்களும் டாடா ஸ்கை சேவையின் கீழ் இருப்பதால்,
அவர்கள் சனல்களைத் தக்கவைக்க டாடா ஸ்கை எண்ணுக்கு மிஸ்ட் கோல் கொடுப்பதின்
விளைவாக அதை சாத்தியப்படுத்த முடியும் என்று இந்த டி.டி.எச் ஒப்ரேட்டர்
அறிவித்துள்ளது.
மேலும் டாடா ஸ்கை நிறுவனம் ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பக்கேச்களில்
ஏற்படவுள்ள மாற்றம் குறித்து அதன் அறிவிக்கத் தொடங்கியுள்ளது.
Post a Comment