Latest Post

முரசு தொலைக்காட்சி முழு நேர தமிழ் திரைப்பட தொலைக்காட்சியாக மாற்றம்

Written By Prathees on 18 November 2021 | 1:10 PM


நண்பா்களே தமிழகத்தின் முன்னணி தமிழ் தொலைக்காட்சியான கலைஞா் டிவியின் மிக பிரபலமடைந்த தொலைக்காட்சியான கலைஞா் முரசு தொலைக்காட்சி 24 மணி நேர தமிழ் திரைப்பட தொலைக்காட்சியாக தமிழகத்தில் உதயமாகியுள்ளது. கடந்த பல வருடங்களாக முரசு தொலைக்காட்சி தமிழ் பழைய திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் என தமிழ் மக்களுக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது.

முரசு


கலைஞா் டிவி நெட்வொா்க்கில் 24 மணி நேர திரைப்பட தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை நீண்ட காலமாக தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. தற்சமயம் 2021 அக்டோபா் 10 திகதி முதல் முரசு தொலைக்காட்சி முழு நேர திரைப்பட தொலைக்காட்சியாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஒளிபரப்பாகும் இலவச திரைப்பட தமிழ் தொலைக்காட்சி கலைஞா் முரசு தொலைக்காட்சியாகும். 

இன்டல்சாட்17 செயற்கைகோளில் தற்சமயயம் உலகளாவிய ஒளிபரப்பை வழங்கி வருகிறது. காலை 6.௦௦ மற்றும் 10.௦௦ மணி மதியம் 12.௦௦ மற்றும் 3.௦௦ மணி மாலை, இரவு 7.௦௦ மற்றும் 11.௦௦ மணி ஆகிய நேரங்களில் திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது. கலைஞா் முரசு தொலைக்காட்சி அனைத்து டிடிஎச்களிலும் மற்றும் கேபிள் டிவி நிறுவனங்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

இசைஞானி இளையராஜா | “இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியத்தின் பேரரசன்” | காண்பதற்கரிய புகைப்படங்கள் உள்ளே 👉🏻

Written By Prathees on 02 June 2021 | 12:32 PM

இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் கொண்ட இன்னிசை தீரனான இசைஞானி இளையராஜா இன்று(ஜூன்.2) தனது 78வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இளையராஜா இந்த பெயரை தமிழ் மக்களால் அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. கவி போற்றும் காலத்தில், புலவர்கள் தான் இயற்றும் பாடலில் போற்றும் தலைவனை, “பாட்டுடைத்தலைவன்” என்பார்கள். இந்த இன்னிசை தீரனான பண்ணைபுரத்துக்காரன் பாட்டுக்கே தலைவனான். மக்களின் மனம் அறிந்து மண்ணை ஆண்டவர்கள் இங்கு பலர் உண்டு, ஆனால் மண்ணை அறிந்து மக்கள் மனங்களை கொள்ளை கொண்டவர் இளையராஜா மட்டுமே. இது கிராமம் என்று சொல்லி கடந்து செல்லும் மக்களின் மத்தியில், அம்மண்ணின் மக்களின் வாழ்வியலை இசை கொண்டு உலகறியச் செய்தவர். வயல்வெளி பாடல்களைப் பளிங்கு சாரீரமாக அனைவருக்கும் கடத்தியவர் இந்த ராஜா.

Ilaiyaraaja 78th Birthday

நம்மை மகிழ்ச்சியில் தூக்கிச் செல்வார். 'உனக்குத் தேவையானதை எடுத்துக் கொள்..!' என்று சொல்லும் ஒற்றை இசை அகராதி அவர். மொழி தெரியாத இந்தி பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த 1976 காலகட்டத்தில், 'அன்னக்கிளி' படத்தில் 'மச்சான பாத்தீங்களா'... எனும் பாட்டு மூலம் ஒட்டுமொத்த இசையுலகத்தையும் தன் பக்கம் திரும்ப வைத்தவர். ஒவ்வொரு பாடல்களுக்கும், பின்னணி இசை மூலம் படத்திற்கும் உயிர் கொடுத்த தாயுமானவர். ராஜா ஒரு அனிச்சை அட்சயம். குள்ள உருவம்தான் நம்மைக் கொள்ளை அடித்து வைத்திருக்கிறது. இசையில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. அத்தனை வகைகளையும் கலை கெடுக்காமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். தமிழ் திரைத்துறையில் பெரும் இசைப்புரட்சியைச் செய்த அன்னக்கிளியில் குயில் கூவ ஆரம்பித்தது அந்த குயில் இன்று வரை கூவுவதை நிறுத்தவே இல்லை.

தேசிய விருது பெறும் இளையராஜா

தேசிய விருது பெறும் இளையராஜா

மகேந்திரன், பாலு மகேந்திரா, பாரதிராஜா என எளிய மக்களின் வாழ்க்கையைப் பாசாங்கு இல்லாமல் படமாக்கும் இயக்குநர்களின் படங்களில் இளையராஜா கொடுத்த பாடல்களும், மெல்லிய உணர்வுகளைக் கடத்தும் பின்னணி இசையும் காலம் கடந்தும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. பாலுமகேந்திரா இயக்கிய 'வீடு' படத்தில், கட்டுமானத்தில் இருக்கும் புதிய வீட்டை முதியவர், சுவரைத் தடவிக் கொண்டு ஆனந்த பூரிப்புடன் சுற்றிப் பார்க்கும் வசனமில்லாத காட்சியில் புல்லாங்குழல், வயலின் மூலம் இளையராஜா கொடுத்த பின்னணி இசை ஒன்று மட்டும் போதும், அவர் பாடல்களில் மட்டுமல்ல... பின்னணி இசையிலும் ராஜா என்பதை நிரூபிப்பதற்கு. தாரை தப்பட்டை, பழசிராஜா ஆகிய படங்களுக்குப் பின்னணி இசைக்காக இரண்டு தேசிய விருதுகளைக் கொடுத்து, மத்திய அரசு பெருமை தேடிக் கொண்டது.

பாலுமகேந்திரா - பாரதி ராஜா உடன் இளையராஜா

பாலுமகேந்திரா - பாரதி ராஜா உடன் இளையராஜா

அதேபோன்று, தமிழ் திரைத்துறையில் இவரின் சமகால கமர்சியல் இயக்குநர்களின் படங்களில் கொடுத்த துள்ளல் இசையும் கொண்டாடப்படுகின்றன. நமக்குத் தெரிந்ததெல்லாம் இசையில் மூன்று. ஃபோக்ஸ், வெஸ்டர்ன், க்ளாசிக்கல். இந்த மூன்றையும் 'ராக்கம்மா கையத் தட்டு பாடலில் யூஸ் பண்ணி பின்னியிருப்பார். ஒரு ஜீவன் அழைத்தது... நாதம் என் ஜீவனே... மெதுவா மெதுவா ஒரு... தென்றல் வந்து தீண்டும்போது... ஒளியிலே தெரிவது தேவதையா... இளங்காற்று வீசுதே... நான் தேடும் செவ்வந்திப் பூவிது... என காலம் கடந்த ஆயிரக்கணக்கான கிளாஸ்சிக் பாடல்களைத் தந்த ஒரே இசை வரலாற்றில் சரித்திரக் குறியீடு அவர்.தானாக உருவெடுத்த சுயம்பு லிங்கம் போல் இளையராஜா மட்டும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்...இருப்பார். அவர் இசையும் வாழ்ந்து கொண்டே இருக்கும். ஏனெனில் அவர் ஒரு ஞானி. இளையராஜாவின் பேச்சுக்களை வைத்து அவரை வசைபாடித் தீர்க்கின்றனர் . ஆனால் அவர்கள் பாடும் வசைகளையும் இசையாக்குவார். தொட்டிலுக்கும் அவர்தான் கட்டிலுக்கும் அவர்தான். அவர் பேசுவதை வைத்து அவரை என்ன வேண்டுமானாலும் பேசலாம். பேசுவோம். நம் வார்த்தைகளை அவர் ஸ்வரங்களாகச் சுவீகரிக்கக்கூடியவர். 'ஜன கன மன...' இந்திய நாட்டிற்குத் தேசிய கீதமாக இருக்கலாம். ஆனால் நம் ஜனத்திற்கு கானம் இசைத்தவர் இளையராஜா. ஜன கான ராஜாவுக்கு அந்த இசைக் காணும் அடி பணிய வேண்டும். ஏனெனில் அதுவே அறம்.

"இளையராஜா இல்லாத படங்களை இயக்க வந்த வாய்ப்பை நான் தவிர்த்தேன்" என்று பாலுமகேந்திரா தெரிவித்திருந்தார். ஆம் அவருக்கு மட்டுமல்ல... எவருக்கும் தவிர்க்க முடியாத நபர்தான் இளையராஜா. “இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்” என்றும் உங்களுக்குத்தான். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இளையராஜா சார்.

-தொகுப்பு-
-ச. பிரதீஸ்வரன்-

SLT PEO TV இல் மேலும் நன்கு தமிழ் மொழி தொலைக்காட்சிகள் || Watch Your Favourite English Channels Now With Tamil Audio on SLT PEO TV

Written By DTH News on 26 May 2021 | 12:21 PM

நண்பர்கள் பலரின் வேண்டுகோளுக்கிணங்க பல் மொழி தொலைக்கட்சி (Multy Audio Feed Television) சேவைகள் பற்றியே இந்த தொகுப்பில் மிக வரிவாக் பார்க்க இருக்கிறோம். அது என்ன பல் மொழி தொலைக்கட்சி என்று சிந்திப்பது புரிகிறது. இந்த பல் மொழி தொலைக்கட்சி பற்றி இந்தியாவில் உள்ளவர்கள் நன்கு அறிந்திருப்பர். இலங்கையர்களுக்கு இது தொடர்பான அனுபவம் சற்று குறைவாகவே இருக்கும். 

தொலைக்காட்சி ஒளிபரப்பு தொழிநுட்பத்தில் இலங்கையர் நாம் மிகவும் பின் தங்கியே உள்ளோம் என்பது உண்மை. பிற நாடுகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை டிஜிட்டல், HD, 4K HD என இமையம் தொடும் சமயம் நாம் இன்னமும் பழைய Analog தொழில்நுட்பம் மூலமே தொலைக்காட்சி சேவைகளை காண்கிறோம். இருந்தும் ஒரு ஆறுதல் Dilaog TV, SLT PEO TV முலமாக சற்று ஒருபடி மேலே போய் ஓரளவுக்கு தெளிவாக இலங்கை தொலைக்காட்சிகளை பார்க்ககூடியதாக உள்ளது. அதுவும் Dilaog TV, SLT PEO TV போன்ற தொலைக்காட்சி சேவை வழங்குனர்கள் Analog மூலமான எமது தொலைக்காட்சி சேவையை பெற்று அவர்கள் டிஜிட்டல் தொழிநுட்பத்திற்கு மாற்றி ஒளிபரப்பு செய்கின்றனர். என் கணிப்பின் படி சாதாரண HD தொழிநுட்பத்தில்கூட இலங்கை தொலைக்காட்சி சேவை ஒன்றை பார்த்து மகிழ ஒரு சகாப்பதம் போகலாம். இது ஒரு நீண்ட மீள் செயலாக்கம் அதிக பணசெலவு என்பதால் இவற்றை இப்போதைக்கு எமது தொலைக்காட்சி அலைவரிசைகள் கற்பனை கூட செய்து பார்க்கமாடார்கள். இவ்வறான ஒரு நிலையில் பல் மொழி தொலைக்கட்சி (Multy Audio Feed Television) பற்றி இலங்கையர் நாம் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

peo tv tamil channel

சரி பல் மொழி தொலைக்கட்சி (Multy Audio Feed Television) என்றல் என்ன, ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பை செய்கின்ற போது அந்த நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் பல மொழிகளை பார்க்ககூடிய வகையில் ஒளிரப்பு செய்கின்றமையே பல் மொழி தொலைக்கட்சி  சேவை ஆகும் (Multy Audio Feed Television). தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பகிகொண்டிருக்கும் சமயமே அதை நாம் Remote மூலம் அந்த நிகழ்ச்சியின் Audio வை வேண்டிய மொழிகளை மாற்றி பார்க்கலாம். 

இந்தியாவில் இவ்வாறான தொலைக்கட்சி அலைவரிசைகள் நிறையவே உள்ளன. அவற்றி சிலவற்றை இத் தொகுப்பின் கீழ் வழங்குகின்றோம். அத்துடன் எம்மால் பதிவுசெய்த FOX Life தொலைக்காட்சி தமிழ் ஒளிபரப்பின் You Tube ஒளித்தொகுப்பினையும் கீழே வழங்குகின்றோம். மேலும் இலங்கையில் SLT PEO TV பல் மொழி தொலைக்கட்சி தொழில்நுட்பத்தில் நான்கு அலைவரிசைகளை 10.11.2020 இல் இருந்து ஒளிபரப்பு செயன்கின்றன. இதில்  இலங்கை தமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இந்த நான்கு தொலைக்காட்சி அலைவரிசைகளும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் கிடைகின்றமை. PEO TV அலைவரிசை விபரங்கள் கீழே கொடுக்கபட்டுள்ளது.

▶️48-Animal Planet (English, Tamil)

▶️66-POGO (English, Tamil)

▶️64-Discovery Kids (English, Tamil)

▶️60-Nickelodeon (English, Tamil)

இந்த நான்கு தொலைக்காட்சிகளையும் தமிழில் காண கீழ்க்கண்ட படிமுறையை உங்கள் PEO TV Remote மூலம் செய்யவும்.

Select Audio: Select Channel > Press OK > Press the Down Arrow Key > Select Tamil > Press OK

மேலும் PEO TV இலங்கை பாராளுமன்ற அமர்வையும் அலைவரிசை இலக்கம் ▶️91 இல் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பார்த்து மகிழலாம். மேலும் இது போன்ற தொலைக்காட்சி அலைவரிசைகள் Dilag TV இல் கிடைக்குமா என்று கேட்டால் இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்பதே எனது பதில். மேலும் Dialog TV வாடிக்கயளர்கள் Dialog TV சேவை முகவர்களிடம், PEO TV இல் இவ்வாறான சேவை கிடைக்கிறது என்று தொடர்ச்சியாக அதிகம் அதிகமாக கோரிக்கை விடுவதன் மூலமே எதிர்காலத்தில் சில சமயம் இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

எமது இந்த தொகுப்பை வாசிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் அதிகம் அதிகம் பகிர்ந்து உங்கள் ஆதரவை எமக்கு தாருங்கள்.

எமது இணையத்தளம்:

எமது முகப்புபுத்தகம்:

எமது ட்விட்டர் பக்கம்:

எமது Youtube சேனல்:

எமது WHATSAPP GROUP



History TV18 HD [English,Hindi,Tamil,Telugu,Bengali]
Star Sports HD 2 [English,Telugu,Kannada]
Star Sports HD 3 [English,Marathi]
Cartoon Network [English,Hindi,Tamil,Telugu]
Pogo [English,Hindi,Tamil]
Hungama [Hindi,Tamil,Telugu]
Nick [English,Hindi,Tamil,Telugu]
Disney Channel [English,Hindi,Tamil,Telugu]
Disney XD [English,Hindi,Tamil,Telugu,Bengali,Marathi]
Sonic [English,Hindi,Tamil]
Zee Q [English,Hindi,Telugu]]
Discovery Kjds [English,Hindi,Tamil]
Disney Junior [English,Hindi,Tamil,Telugu]
Nick Jr [English,Hindi]
Discovery Channel [English,Hindi,Telugu,Bengali]
History TV18 [English,HindiTamil,Telugu,Bengali]
NGC [English,Hindi,Tamil,Telugu,Bengali]
Fox Life [English,Hindi,Tamil,Bengali]
Animal Planet [English,Hindi]
Topper [English,Hindi]
Discovery Science [English,Hindi]
Star Sports 1, 2, 3, 4[English,Hindi]
Nat Geo Wild [English,Hindi,Tamil]
NDTV Good Times [English,Hindi,Tamil]
TLC [English,Hindi]
Telebrands [Hindi,Tamil,Malayalam]
Sri Sankara [Kannada,Tamil]
Sony Kix [English,Tamil,Telugu]
SVBC [Telugu,Tamil,Kannada]

Travelxp 4K HDR தமிழ் மொழியில்

Written By DTH News on 24 May 2021 | 9:20 AM

நண்பா்களே இந்தியாவின் Celebrities Management Private Limited நிறுவனத்தின் சுற்றுலா தொடா்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொலைக்காட்சியான Travelxp 4K HDR ஆசியா தொலைக்காட்சியில் தமிழ் Audio புதிதாக தொடங்கியுள்ளது. Travelxp தொலைக்காட்சி 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் உயா் தொழில்நுட்பமான HD இல் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ஆங்கில தொலைக்காட்சிகள் தமிழ் மொழியில் நிகழ்ச்சிகளை தொடங்கி வரும் நிலையில் Travelxp தொலைக்காட்சி தென்னிந்தியாவில் தமிழ் மொழியில் முதன்முறையாக தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளது.

Travelxp Tamil

பெங்காளி மொழி Audio மட்டும் Travelxp HD தொலைக்காட்சியில் சோ்க்கப்பட்ட நிலையில் தற்சமயம் தமிழ் மொழியும் தொடங்கப்பட்டுள்ளது. Travelxp HD கட்டண தொலைக்காட்சியாக Measat 3A செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது. DTH மற்றும் Cable நிறுவனங்களில் விரைவில் Travelxp HD தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கும். அனைத்து பகுதிகளிலும் 6 அடி முதல் 12 அடி வரையிலான C Band டிஷ் ஆண்டெனாவை பயன்படுத்தி இந்ததொலைக்காட்சியை பார்த்து மகிழலாம்.

ஏற்கனவே Travelxp தொலைக்காட்சி தமிழ் SD தொழில்நுட்பத்தில் தொடங்க்பட்டுள்ளது. Travelxp HD ஆசியாவின் தமிழ் மொழியின் நிகழ்ச்சிகளை காண தங்கள் Setup Box இன் Remort இல் Audio Button ஐ Click செய்து வரக்கூடிய மொழிகளில் தமிழ் மொழியினை தோ்வு செய்து காணலாம்.

தென்னிந்தியாவில் தமிழ் மொழியில் Travelxp 4K HDR தொலைக்காட்சியே முதல் Ultra HD தொலைக்காட்சியாகும். தொலைக்காட்சிக்கான மாதாந்த கட்டண விலை 30 இந்திய ரூபாய் என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. Travelxp 4K HDR தொலைக்காட்சி அனைத்து நாடுகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

அலைவாிசை விபரங்கள்

Satellite             Measat3/3a@91.2E(C-Band)

Freq Rate          4162

Symbol Rate     25250

Polar                 Horizontal

Modulation      HD.Mpeg4/Dvb s2(8PSK)

Mode               Pay/Conax

Fec                  3/4

TRPஐ அடித்த நொறுக்க வரும் புத்தம் புதிய பிரமாண்ட சீரியல் - விஜய் டிவியின் அடுத்த அதிரடி

Written By DTH News on 11 April 2021 | 1:20 PM

சின்னத்திரையில் தற்போது TRPயின் உச்சத்தில் இருக்கும் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாக்கி வரும் தொலைக்காட்சி, விஜய் டிவி.

இதில் பல சூப்பர்ஹிட் சீரியல்களும் இதுவரை ஒளிபரப்பாகி வந்துள்ளது. மேலும் தற்போது மக்கள் மத்தியில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் முடிவுக்கு வருகிறது.

velammal

அதிலும் சஞ்சீவ் நடித்து வந்துகொண்டிருந்த காற்றின் மொழி சீரியல் இந்த வாரத்திலிருந்து முடிவுக்கு வந்துள்ளது.

இதனால் விஜய் டிவியில் புதிதாக பிரமாண்டமான வேலம்மாள் எனும் புதிய சீரியல் ஒளிபரப்பவுள்ளது.

ஆம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மௌன ராகம் சீரியல் சீசன் 1ல் சத்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்த குழந்தை நட்சத்திரம் நடிகை கிருத்திகா தான், மீண்டும் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்துக்கவுள்ளார்.

இந்த சீரியல் வரும் திங்கள் முதல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

இதோ அந்த வீடியோ..


பிக் பாஸ் 4 துவங்குகிறது.. வைரலாகும் ப்ரொமோ வீடியோ இதோ

Written By DTH News on 30 August 2020 | 12:15 PM

எமது Whattsapp குழுவில் இணைய கீழ் உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள் 
https://chat.whatsapp.com/Ijpi6Vc2tkN6w5w7uq5fs5

தமிழில் பிக் பாஸ் நான்காவது சீசன் கடந்த ஜூன் மாதமே துவங்கி இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பிரச்சனை வெடித்ததால் அது துவங்க முடியாமல் போனது. மேலும் ரசிகர்களும் இந்த வருடம் பிக் பாஸ் 4 துவங்குமா துவங்காதா என கேட்கும் அளவுக்கு அது பற்றி எந்த அப்டேட்டையும் விஜய் டிவி வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் அளிக்கும் விதத்தில் திடீரெனெ பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் கமல்ஹாசன் புதிய கெட்டப்பில் வந்து பேசுகிறார். இந்த புகைப்படங்கள் ஒரு வாரத்திற்கு முன்பே வெளிவந்து பெரிய அளவில் வைரல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது பிக் பாஸ் ப்ரோமோ ஷூட்டிங்கில் எடுத்தது என கூறப்படவில்லை.

தற்போது வெளியாகி இருக்கும் பிக் பாஸ் 4 ப்ரொமோவில் கமல் கொரோனா பற்றி தான் அதிகம் பேசி இருக்கிறார். அவர் கூறி இருப்பதாவது..

bigg boss 4 promo

"நலமா.. நாம் எதார்த்தமாக ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ளும் கேள்வி இது. உலகெங்கிலும் பரவி இருக்கும், மருந்தே கண்டுபிடிக்கப்படாத, ஒரு நோய், இந்த உலகம் ஒரு சின்ன கிராமம் என்பதை நமக்கு உணர்த்தி இருக்கிறது. எங்காவது அமேசானில் தீப்பிடித்தால் எங்கு நமக்கு ஆக்சிஜன் குறைகிறது. நீங்களும் நானும் வேலைக்கு போகலைனா.. நம்மை நம்பி இருக்குற ஆட்டோ ரிக்ஷா டிரைவர், பஸ் ஓட்டுநர், அடிக்கடி சாப்பிட போகும் ஹோட்டல், டீ கடை, மீன் கடைகார ஆயா, அவங்களுக்காக மீன் பிடிக்க போகிற மீனவர்கள்.. இப்படி சங்கிலி தொடராக.. நம்மை நம்பி இருப்பவர்கள் ஐந்து மாதமாக வேலை இல்லாமல் இருக்கிறார்கள். நோய் ஆபத்தானது தான். ஜாக்கிரதையாக இருக்கனும்.. ஆனால் அதுக்காக வீட்டிலேயே வேலை இல்லாமல் இருக்க முடியாது. WHO அதாவது உலக சுகாதார அமைப்பு நமக்கு அறிவுறுத்தி இருப்பது படி பாதுகாப்பாக இருப்போம்.

இதோ நான் வந்துட்டேன். அதே மாதிரி நீங்களும் உங்கள் வேலையை தொடங்குங்கள், நம்மை நம்பி இருப்பவர்களை வாழ வையுங்கள். நமே முன்னெடுப்போம் ஒரு புதிய தொடக்கத்தை, புதிய எதார்த்தத்தை, புதிய வாழ்க்கையை.. நாமே தீர்வு! சரி இப்போ வேலையை ஆரம்பிக்கலாமா" என கமல் பேசி உள்ளார்.

தற்போது கொரோனா காரணமாக தியேட்டர்கள் கூட மூடப்பட்டு இருப்பதால் பொழுதுபோக்கிற்கு எதுவும் இல்லாமல் இருக்கும் ரசிகர்களுக்கு இனி பிக்பாஸ் தான் என்டர்டெயின்மென்ட் ஆக இருக்க போகிறது.

இதில் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ள பிரபலங்களை தேர்வு செய்யும் பணி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமற்ற ஒரு போட்டியாளர்கள் லிஸ்ட் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. அதில் ரம்யா பாண்டியன், சுனைனா, அதுல்யா ரவி, வித்யூலேகா ராமன், கவர்ச்சி நடிகை கிரண் ரத்தோட் உள்ளிட்டவர்கள் பெயரும் இடம் பெற்று இருந்தது. இது பற்றி விளக்கம் கூறி இருந்த சுனைனா தான் அந்த நிகழ்ச்சிக்கு சென்று விட்டால் இப்போது ஒப்பந்தம் ஆகி இருக்கும் படங்களை எல்லாம் யார் நடித்து முடிப்பது என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.



ZEE TAMIL HD உட்பட மேலும் 6 HD சனல்கள் Videocon d2h இல்!!! விபரம் உள்ளே☛

Written By DTH News on 18 August 2020 | 1:31 PM

Videocon d2h தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அவர்களிடம் சில சனல்கள் கிடையவே கிடையாது. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் Zee Network  HD சனல்களை   அவர்கள் எடுக்கவே இல்லை.

தமிழ் வாடிக்கையாளர்கள் உட்பட மாற்று மொழி வாடிக்கையாளர்கள் வரைக்கும் Zee Network  HD சனல்களை எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு இப்போது சமயம் வந்துவிட்டது.

Zee Network இலிருந்து சில சனல்களை Videocon d2h  நிறுவனமானது தற்போது ஒளிபரப்பிக் கொண்டே இருக்கிறது. இதில் மிக முக்கியமாக ZEE TAMIL HD  தமிழ் வாடிக்கையாளர்களுக்கு வருகின்றது. 

இந்த வாரம் மொத்தமாக 6 HD சனல்களை Videocon d2h நிறுவனம் தமது சேவையில் இணைத்துள்ளது.

  1. Zee Tamil HD இது ஒரு தமிழ் சனல். இது 979 சனல் நம்பரில் கிடைக்கின்றது.  இதனுடையவிலையானது 19 இந்திய ரூபா.
  2. Zee Telugu HD இது ஒரு தெலுங்கு சனல். இது 984 சனல் நம்பரில்  கிடைக்கின்றது. இதனுடைய விலையானது 19 இந்திய ரூபா.
  3. Zee Cinimalu HD இது ஒரு தெலுங்கு சனல். இது 985 சனல் நம்பரில் கிடைக்கின்றது. இதனுடைய விலையானது 16 இந்திய ரூபா.
  4. Zee Keralam HD இது ஒரு மலையாள சனல். இது 993 சனல் நம்பரில் கிடைக்கின்றது. இதனுடைய விலையானது 8 இந்திய ரூபா.
  5. Zee Kannada HD இது ஒரு கன்னட சனல். இது 997 சனல் நம்பரில் கிடைக்கின்றது. இதனுடைய விலை 19 இந்திய ரூபா.
  6. & Prive HD இது ஒரு இங்கிலீஷ் மூவி சனல். இது 947 சனல் நம்பரில் கிடைக்கின்றது. இதனுடைய விலையானது 19 இந்திய ரூபா.

சீரியல் புதிய எபிசோடுகள் மீண்டும் எப்போது துவங்கும்? சன் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Written By DTH News on 19 July 2020 | 12:54 PM

கொரோனா காரணமாக மக்கள் வீடுகளை விட்டு கூட வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் அவர்கள் பொழுதுபோக்கிற்காக அதிகம் நம்பி இருப்பது தொலைக்காட்சிகளை தான். ஆனால் அந்த அளவுக்கு மக்களுக்கு பொழுதுபோக்காக இருந்து வரும் டிவி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் ஷூட்டிங்கை மேற்கொள்ள முடியாமல் அனைத்து தொலைக்காட்சிகளும் திணறி வருகின்றன.

அதனால் ஒளிபரப்பாகி வந்த அனைத்து சீரியல்களும் நிறுத்தப்பட்டு தற்போது பழைய சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தன. பல வருடங்களுக்கு முன்பு பார்த்த சீரியல்களை மீண்டும் மக்கள் பார்த்து வருகின்றனர்.
 
Sun TV Serials RELAUNCH From 27th July

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதனால் சீரியல் ஷூட்டிங் மீண்டும் துவங்கி உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து தான் இந்த ஷூட்டிங் நடத்தபட்டு வருகிறது என தெரிகிறது. இந்நிலையில் சீரியல்களின் புதிய எபிசோடுகளினை எப்போது மீண்டும் ரசிகர்கள் பார்க்கலாம் என்ற தகவல்களை தொலைக்காட்சி சேனல்கள் வெளியிடாமல் இருந்தன.

தற்போது சன் டிவி முதல் முறையாக அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சன் டிவி கூறியிருப்பதாவது..

"உங்கள் அபிமான மெகாத் தொடர்கள், புதிய திருப்பங்களோடு, உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் புத்தம் புதிய எபிசோடுகளுடன் வருகிறது.. ஜூலை 27 முதல், உங்கள் சன் டிவியில்.." என குறிப்பிட்டுள்ளனர்.


அதனால் கொரோனாவுக்கு முன்பு பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த சீரியல்களின் புதிய அத்தியாயங்களை இன்னும் ஒருவாரத்தில் மீண்டும் பார்க்கலாம் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சித்தி 2, நாயகி, கல்யாண வீடு போன்ற சீரியல்களை மீண்டும் பார்க்க காத்திருப்பதாக ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

இது போல மற்ற தொலைக்காட்சிகளும் அதிகாரபூர்வ அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கொரோனா தொற்று காரணமாக ஷூட்டிங் நடத்துவதில் பல்வேறு சிக்கலைகளையும் குழுவினர் சந்தித்து வருகின்றனர். அதில் முக்கியமானது நடிகர்களை மீண்டும் ஒன்றிணைத்து ஷூட்டிங் நடத்துவதில் உள்ள சிக்கல் தான். பெரும்பாலும் தமிழ் சின்னத்திரையில் கேரளா, கர்நாடகா போன்ற மாநில நடிகைகள் தான் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். அவர்கள தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டதால் மீண்டும் அவர்கள் சென்னை வர முடியாத சூழ்நிலை தான் உள்ளது.


அப்படி வந்தாலும் இ-பாஸ், குவாரன்டைன் உள்ளிட்ட சிக்கல்கள் உள்ளன. அதனால் பல முன்னணி சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் அதில் இருந்து விலகுவதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான அக்னி நட்சத்திரம் தொடரில் வில்லியாக அகிலா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த மெர்ஷினா தான் கேரளாவில் இருப்பதால் இனி மீண்டும் சென்னை வர முடியவில்லை அதனால் வேறு ஒரு நடிகை அந்த ரோலில் இனி நடிப்பார் என அறிவித்து இருந்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

"வெளியில் செல்வது பாதுகாப்பற்ற ஒன்றாக இருக்கிறது. அதனால் என்னால் வேலைக்காக வாராவாரம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்று வர முடியாது. ஏனென்றால் சென்னையில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. திருவனந்தபுரத்திலும் அப்படித் தான் இருக்கிறது. அதனால் அக்னி நட்சத்திரம் தொடர் விரைவில் மீண்டும் ஒளிபரப்பாகும். ஆனால் அதில் அகிலாவாக வேறு ஒரு புதிய நடிகை இருப்பார். பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி என அவர் கூறி இருந்தார்.

மேலும் சித்தி 2 சீரியலில் நான்கு நடிகர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். பொன்வண்ணனுக்கு பதில் இனி நிழல்கள் ரவி நடிக்கவுள்ளார்.
 
Support : DTH News | DTH News 1st | DTH News 1st
Copyright © 2021. DTH News - All Rights Reserved
Template Created by Pratheeswaran Published by DTH News
Proudly powered by DTH News 1st